[ad_1] உலகின் விலையுயர்ந்த பூனைகளை பற்றி தெரியுமா?

உலகின் விலையுயர்ந்த பூனைகளை பற்றி தெரியுமா?

Jul 24, 2024

By: Anoj

British Shorthair

இந்த வகை பூனை வட்ட முகம், அடர்த்தியான ரோமம் கொண்டிருக்கும். பிரிட்டிஷ் ஷார்ட்ஹேர் என அழைக்கப்படும் இவை வளர்ப்பவர்களிடம் அமைதியான முறையில் நடந்துக் கொள்ளும். இதன் விலை குறைந்தது ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Image Source: pexels-com

Maine Coon

பூனை இனங்களுள் மிகப்பெரிய உருவத்துடன் காணப்படும் மெயின் கூன் வகை பூனைகள் வட அமெரிக்காவைச் சேர்ந்தது. இது உடல் தோற்றத்தைப் பொறுத்து வேட்டையாடும் திறனையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஆகும்.

Image Source: pexels-com

Persian cat

பாரசீக பூனை என அழைக்கப்படும் இவை தட்டையான முகம் மற்றும் நீண்ட முடிகளை கொண்ட இனமாகும். அமைதியான சுபாவம் கொண்ட இவ்வகை பூனைகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

Image Source: pexels-com

Peterbald

ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த பீட்டர்பால்ட் வகை பூனைகளுக்கு முடியே இருக்காது. சுட்டித்தனமாக இந்த பூனைகள் சுமார் 5 ஆயிரம் டாலர்கள் விலை போகிறது.

Image Source: istock

Ragdoll

நீல நிற கண்கள் கொண்ட பூனை இனமான ராக்டோல் உருவம் மற்றும் அதிக எடை கொண்டது. அதிகளவில் விளையாட்டு காட்டும் இந்த பூனைகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

Image Source: pexels-com

Russian Blue

மரகதப்பச்சை கண்களுடன், நீல- சாம்பல் நிற கலவையில் காணப்படும் இந்த ரஷ்ய நீலம் வகை பூனை மனிதர்களுடன் நல்ல பிணைப்பை உண்டாக்குகிறது. இதன் விலை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels-com

Savannah cat

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலப்பின பூனை இனமாக உருவாக்கப்பட்ட சவான்னா பூனை, புத்திசாலி மற்றும் ஆற்றல் மிக்கது. இந்த வகை பூனை ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Image Source: unsplash-com

Scottish Fold

ஆந்தையைப் போல மடிந்த காதுகளைக் கொண்ட ஸ்காட்டிஷ் ஃபோல்ட் வகை பூனைகள் இனிமையான சுபாவம் கொண்டவை. இவை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

Image Source: pexels-com

Ashera cat

பூனை இனங்களில் மிக உயர்ந்த இனமாக கருதப்படும் அஷேரா, ரூ. 82 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. காட்டுப்பூனை தோற்றம் கொண்ட இந்த பூனைக்கான கவனிப்பு என்பது அதிக விலை மதிப்பை கொண்டுள்ளது.

Image Source: instagram-com/savannahseattle

Thanks For Reading!

Next: விவாகரத்து இல்லாத வாழ்க்கை வாழ ஒரு சில டிப்ஸ்

[ad_2]