[ad_1] உலகின் விலை உயர்ந்த நாய் இனங்கள் பற்றி தெரியுமா?

Aug 3, 2024

உலகின் விலை உயர்ந்த நாய் இனங்கள் பற்றி தெரியுமா?

mukesh M

விலை உயர்ந்த நாய்கள்!

நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணி என்று நாம் சொல்வோம். அப்படிப்பட்ட நாய்களை வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்க பலரும் விருப்பப்படுவோம். ஏகப்பட்ட இனங்களை உள்ளடக்கிய இந்த நாய்களில் விலை உயர்ந்த நாய் இனங்கள் ஒரு சில பற்றி இங்கு காணலாம்.

Image Source: pexels-com

Akita

ஜப்பானிய நாய் இனமான அகிதா வரலாற்று ரீதியாக கரடிகளை காப்பதற்கும் வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இரட்டை மடிப்பு தோல், சுருண்ட வால் பார்ப்பதற்கே அழகாக இருக்கும் இந்த நாயின் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும்.

Image Source: unsplash-com

Azawakh

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாய் இனமான அசவாக் தோற்றத்தில் ராஜபாளையம் நாய்களை போன்று இருக்கும். வேகத்திற்கு பெயர் பெற்ற இந்த நாய் குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருக்கும். இதன் விலை குறைந்தது ரூ.2 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Image Source: unsplash-com

Chow Chow

சீனாவைச் சேர்ந்த சௌ சௌ இனம் நாயின் தோல் பார்ப்பதற்கு பஞ்சு போன்று இருக்கும். நாயின் முகம் சிங்கம் போன்ற தோற்றத்தோடு இருக்கும். இதன் விலை இந்தியாவில் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும்.

Image Source: unsplash-com

Bulldog

மாஸ்டிஃப் வகை நாய்களின் பிரிட்டிஷ் இனமான புல்டாக் இந்தியாவில் மிகவும் பிரபலம். இதன் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Image Source: unsplash-com

lowchen

போர்த்துகீசிய நீர் நாய் என கருதப்படும் லோசேன் இன நாய்கள் பல்வேறு நிறங்களில் உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.2 லட்சத்தை தாண்டும்.

Image Source: unsplash-com

Rottweiler

மாடு மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டு வந்த ராட்வீலர் இந்தியாவில் தற்போது வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த நாயின் விலை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விலை போகிறது.

Image Source: unsplash-com

Saluki

அரேபிய வேட்டை நாய் இனமாக சலுகி வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இனமாகும். இதன் விலை இந்தியாவில் ரூ.1 லட்சத்தை தாண்டும்.

Image Source: unsplash-com

Samoyed

சமோய்ட் எனப்படும் நாய் இனம் இந்தியாவில் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை போகிறது. குடும்பத்தினருடன் நட்புறவாக இருக்கும் இந்த நாய் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கர்ப்பமாக உள்ள பெண்கள் ஐஸ் சாப்பிடலாமா? கூடாதா?

[ad_2]