Jun 13, 2024
ஆவணப்படங்கள் உண்மை தகவல்களை வழங்குவதோடு நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அந்த வகையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கவனம் பெற்ற சிறந்த இந்திய ஆவணப்படங்கள் இதோ.
Image Source: instagram-com
குற்ற ஆவணப்படமான இது கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் 2002 முதல் 2016 வரை தனது கணவர் உட்பட ஆறு பேரை சயனைடு வைத்து கொலை செய்ததையும், அதுகுறித்த காவல்துறை விசாரணை முறைகளையும் காட்டுகிறது.
Image Source: instagram-com
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற இது விபச்சாரத் தொழிலில் சிக்கித் தவிக்கும் தாய்மார்களின் பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? என்பதை உணர்வுப்பூர்வமாகக் காட்டுகிறது.
Image Source: instagram-com
ஆஸ்காரின் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை வென்ற இது முதுமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அனாதை ஆக்கப்பட்ட குட்டி யானையைப் பராமரிக்க தங்கள் வாழ்வையே அர்ப்பணித்ததைக் காட்டுகிறது.
Image Source: instagram-com
இந்திய ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு மத்தியில், தங்கள் தனித்துவமான குரலை உயர்த்தும் தலித் பெண்களின் செய்தி நிறுவனத்தைப் பற்றிய கதை. தலைமை நிருபர் மீராவின் பயணத்தைப் பதிவு செய்கிறது.
Image Source: instagram-com
டெல்லியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் தங்களது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்ததை விவரிக்கிறது இந்த கதை. ‘House of Secrets’ பார்ப்போரைச் சிந்திக்க வைக்கும் பல கேள்விகளை எழுப்புகிறது.
Image Source: instagram-com
காசியின் மிகவும் பரபரப்பான தகன மைதானத்தில் வேலை செய்யும் கட்டாயத்தில் உள்ள ஏழு குழந்தைகளின் வாழ்வைப் பற்றிய கதை இது. பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் பல கேள்விகளை எழுப்பக் கூடியது.
Image Source: instagram-com
டெல்லியின் காற்று மாசுபாட்டினால் வானத்தில் இருந்து Black Kite பறவைகள் கீழே விழுகின்றன. இயற்கை சமநிலையைக் காக்கும் இந்த பறவையைக் காப்பாற்றப் போராடும் இரு சகோதரர்களைப் பற்றிய கதை இது.
Image Source: instagram-com
இது மத்திய இந்தியாவின் குலாபி கும்பலைச் சேர்ந்த பெண்கள் பாலின வன்முறை, சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதைச் சொல்கிறது. வன்முறை இல்லாத போராட்டத்தின் வலிமையைக் காட்டுகிறது.
Image Source: instagram-com
Thanks For Reading!