Jul 5, 2024
BY: S Anojஉலகம் முழுவதும் பிரைடு ரைஸூக்கு பிரத்யேக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆசியா முதல் அமெரிக்கா வரை, ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான சுவை கொண்ட பிரைடு ரைஸ் மக்கள் சாப்பிடுகின்றனர். அந்த வகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
இது சீன உணவு வகையில் மிகவும் பிரபலமானது. இதில் இறால், பச்சை பட்டாணி, கேரட், முட்டை மற்றும் நறுமணமிக்க மல்லிகை அரிசி பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த பிரைடு ரைஸ் வகையை பெரும்பாலான சீன உணவகங்களில் காண முடியும்
Image Source: instagram-com/tubbyherbivore
இது ஜப்பான் உணவு வகையில் மிகவும் பிரபலமானகும். இந்த பிரைடு ரைஸ் பன்றி இறைச்சி, வெங்காயம், முட்டை மற்றும் இஞ்சி போன்ற சுவையான பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிக்க இறுதியாக சோயா சாஸை சேர்க்க செய்வார்கள்
Image Source: instagram-com/pyaephyohan90
இது தாய்லாந்தின் ஸ்பெஷல் பிரைடு ரைஸ். அன்னாசி, இறால், முந்திரி மற்றும் உலர் திராட்சையும் சேர்க்கப்படுகிறது. இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் குழந்தைகளும் ஃபேவரைட் என சொல்லலாம்
Image Source: instagram-com/crappysotong
காரமும், நறுமணமும் நிறைந்த இந்த பிரைடு ரைஸ், இந்தோனேஷியாவின் ஃபேவரைட் டிஷ்ஷாகும். இதில் சோயா சாஸ், பூண்டு, சின்ன வெங்காயம், புளி மற்றும் மிளகாய் சேர்க்கப்படுகிறது. இது பொரும்பாலும் பொரித்த முட்டை மற்றும் இறாலுடன் பரிமாறப்படக்கூடும்.
Image Source: instagram-com/750grammes
இது வியட்நாம் பிரைடு ரைஸ் வகையாகும். நறுக்கிய காய்கறிகள், இறால் மற்றும் மீன் சாஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு இனிப்பு, காரம், கசப்பு என வித்தியாசமான சுவையை கொண்டிருக்கும்.
Image Source: instagram-com/8oka-yas4
இது பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபலமான காலை உணவாகும். பழைய சாதம், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் எளிய உணவாகும். இதை பெரும்பாலும் பொரித்த முட்டை மற்றும் இறைச்சியுடன் பரிமாறுவார்கள்.
Image Source: instagram-com/norecipes
இது உலக மக்கள் விரும்பி சாப்பிடும் ஸ்பானிஷ் ஸ்டைல் பிரைடு ரைஸ் உணவாகும். குங்குமப்பூ கலந்த அரிசி, குடை மிளகாய், பச்சை பட்டாணி, பன்றி இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் மற்றும் குங்குமப்பூ பயன்பாடு தனித்துவமான சுவையை அளிக்கிறது
Image Source: instagram-com/chefdudumesquita
இது தாய்லாந்து ஸ்டைலில் உருவான பிரைடு ரைஸ் என்றாலும், ஃபிரைடு சிக்கன், உலர் திராட்சை, கெட்ச் அப் போன்ற அமெரிக்க பொருட்கள் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது பொரித்த முட்டையுடன் பரிமாற செய்யப்படுகிறது.
Image Source: instagram-com/ms-xtanz-cooking
Thanks For Reading!