[ad_1] உலர் பழங்களை எதில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் தெரியுமா ?

Aug 21, 2024

உலர் பழங்களை எதில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் தெரியுமா ?

Nivetha

உலர் பழங்கள்

பழங்கள் சிலவற்றை அந்தந்த சீசனில் மட்டுமே வாங்கி சாப்பிட்டு அதன் சத்துக்களை பெற முடியும். இப்பழங்களை அனைத்து நேரமும் சாப்பிட வேண்டும் என்பதற்காக கிவி, திராட்சை, அத்திப்பழம் போன்ற பழங்களை உலர வைத்து விற்கப்படுவதே இந்த உலர் பழங்கள்.

Image Source: istock

ஊட்டச்சத்துக்கள்

உலர் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் இந்த உலர் பழங்களை நாம் ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஒமேகா 3, வைட்டமின்கள் டி, ஈ, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களை நம்மால் பெற முடியும்.

Image Source: istock

ஊறவைப்பது

வால்நட், முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்டவைகளோடு உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது தான் நல்லது என்று கூறுகிறார்கள். ஆயுர்வேத மருத்துவப்படி, இப்படி ஊறவைத்து சாப்பிடுவது தான் முழு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றும், இதிலிருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Image Source: pexels

தண்ணீரா இல்லை பாலா ?

அப்படி இந்த உலர் பழங்களை நாம் எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும், தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா அல்லது பாலில் ஊறவைக்க வேண்டுமா? என்று பல்வேறு கேள்விகள் நமக்குள் எழும் பட்சத்தில் அது குறித்த விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Image Source: istock

வெவ்வேறு நன்மைகள்

நட்ஸ் வகைகள் மற்றும் இந்த உலர் பழங்களை பால் மற்றும் தண்ணீர் என இரண்டில் எதில் வேண்டுமானாலும் ஊறவைக்கலாம். ஆனால் அதில் கிடைக்கும் நன்மைகள் மாறும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image Source: istock

தண்ணீர்

உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதிலிருக்கும் பைடிக் அமிலத்தன்மை குறைய துவங்கும். இந்த அமிலம் அதிகளவில் உட்கொண்டால் இரைப்பைக்கு சென்றடைந்து நமது செரிமான அமைப்பினை சேதப்படுத்தி, அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில் இதனை தண்ணீரில் ஊறவைப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

Image Source: istock

பால்

உலர் பழங்களை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம், புரதம், தாதுக்கள் ஆகியவற்றை நம்மால் பெற முடிகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உலர் பழங்களை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.

Image Source: istock

பின்னடைவு

இரண்டிலும் ஊறவைக்கலாம் என்றாலும், தண்ணீரில் உலர் பழங்களை இரவில் ஊறவைத்தால் மறுநாள் காலையில் எடுத்து சாப்பிடலாம். அதுவே பால் என்றால் அவ்வளவு நேரம் ஊறவைக்க முடியாது. எனவே பாலில் ஊறவைக்கும் பட்சத்தில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் விடாமல் எடுத்து சாப்பிட வேண்டும்.

Image Source: istock

குழந்தைகள்

இந்த உலர் பழங்களை இப்படி ஊறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து காணப்படுவார்கள். மேலும் பல்வேறு ஊட்டசத்துக்களை பெறுவதற்கு இது பெருமளவில் பங்கு வகிக்கிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: நீரிழிவு நோயாளிகள் பக்கவாதத்தால் அதிகளவு பாதிக்கப்படுவது ஏன் தெரியுமா ?

[ad_2]