[ad_1] உலர் பழங்கள் சாப்பிட சரியான நேரம் எதுவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க

Jul 23, 2024

உலர் பழங்கள் சாப்பிட சரியான நேரம் எதுவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க

Nivetha

உலர் பழங்கள்

தற்போதைய அவசர உலகத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை தான் நாம் அதிகம் எடுத்து கொள்கிறோம். இதற்கிடையே, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சில உணவுகளை தேடி தேடி பலரும் சாப்பிட்டு வருகிறார்கள்.

Image Source: istock

ஊட்டச்சத்துக்கள்

அப்படிப்பட்ட உணவு வகைகளில் முதன்மையானது தான் இந்த உலர் பழங்கள். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, தொடர்ந்து இதனை சாப்பிட்டு வரும் பட்சத்தில் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும். இந்நிலையில் இந்த உலர் பழங்களை உட்கொள்ள சரியான நேரம் எது என்பதை தான் இப்பதிவில் நாம் காணவுள்ளோம்.

Image Source: istock

வகைகள்

உலர் பழங்கள் என்றால் அதில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம்பழம், பாதாம், மக்கானா உள்ளிட்டவை அதிகளவில் உட்கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும் நம்முள் பலருக்கு இந்த உலர் பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்னும் விவரம் தெரிவதில்லை.

Image Source: istock

பலன் கிடைக்காது

சரியான நேரத்தில் சாப்பிடாமல் நினைத்த நேரத்தில் இப்பழங்களை சாப்பிட்டால் எவ்வித பலனும் கிடைக்காது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள். சரியான நேரத்தில் எடுத்து கொண்டால் மட்டுமே இதை சாப்பிட்டதற்கான பலன் கிடைக்கும்.

Image Source: pixabay

வெறும் வயிற்றில்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உலர் பழங்களை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். இதிலிருந்து நமது உடலுக்கு அதிகளவு புரத சத்து கிடைப்பதோடு, நாள் முழுக்க ஆற்றலுடன் செயல்படவும் உதவுகிறது.

Image Source: istock

காலை உணவுக்கு முன் ?

இந்த உலர் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தவறி விட்டால் காலை உணவு சாப்பிடும் முன்னரோ அல்லது காலை உணவு சாப்பிட்டு முடித்த பின்னரோ கூட சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்னும் அளவீடு நிச்சயம் இருத்தல் வேண்டும்.

Image Source: istock

இரவில் தவிர்க்கவும்

இந்த உலர் பழங்களை இரவில் சாப்பிட கூடாது. ஏனெனில் இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்த கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிற்றுண்டி சாப்பிடும் நேரங்களிலும் வேறு ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை எடுத்து கொள்வதற்கு பதிலாக இதனை சாப்பிடலாம்.

Image Source: istock

ரத்தத்தை சுத்தப்படுத்தும்

தொடர்ந்து உலர் பழங்களை சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் பலவீனமானவர்கள் இயல்பான ஆரோக்கியத்தை பெறலாம். மேலும் இதில் ரத்தத்தை சுத்தம் செய்யும் பண்புகள் நிறைந்துள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.

Image Source: istock

ஊறவைத்த உலர் பழங்கள்

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் கலவைகளை போட்டு ஊறவையுங்கள். மறுநாள் காலை அதனை சாப்பிடுங்கள். இதுவே உலர் பழங்கள் சாப்பிட சரியான முறையாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நேக்ஸ் பதில் இதனை கொடுக்கலாம், மிகவும் நல்லது.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: தயிரில் உப்பு சேர்த்தால் நல்லதா? சர்க்கரை சேர்த்தால் நல்லதா ?

[ad_2]