Aug 6, 2024
BY: Anoj, Samayam Tamilசிறுதானிய வகைகளில் பனிவரகு மிகவும் ஆரோக்கியமானது. அதனை பயன்படுத்தி எப்படி ஹெல்தியான தோசை செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பனிவரகு - 1 கப்; அரிசி மாவு - கால் கப்; தயிர் - 1 கப்; மிளகு தூள் - 1 டீஸ்பூன்; ப.மிளகாய் - 2; சீரகம் அரை டீஸ்பூன்; இஞ்சி - 1 இன்ச்; வெங்காயம் - 2; கடுகு - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு; வர மிளகாய் - 2
Image Source: istock
பனிவரகு அரிசியை கடாயில் வெறுமனே வதக்க வேண்டும். பின் அவற்றை ஆறவைத்து பிளெண்டரில் போட்டு பொடியாக அரைக்கவும்
Image Source: istock
இப்போது பெரிய பவுல் ஒன்றில் அரைத்த பனிவரகு கலவை, அரிசி மாவு, தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: pexels-com
கரைத்த மாவுடன் சீரகத்தை சேர்த்து கலக்கிவிட்டு, மிளகு தூள், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்
Image Source: istock
அனைத்து பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்த மாவை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்
Image Source: istock
இப்போது கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை சேர்த்து தாளிக்க வேண்டும்
Image Source: istock
தாளித்த கலவையை மாவில் சேர்த்து மிக்ஸ் செய்தால், பனிவரகு சீரக தோசை மாவு ரெடியாகவிடும்
Image Source: istock
இப்போது, வழக்கமான முறையில் தோசைக்கல்லில் மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து மொறுமொறுவென சுட்டு எடுக்கலாம். இதனை காலை அல்லது இரவு உணவாக செய்து கொடுக்கலாம்
Image Source: istock
Thanks For Reading!