[ad_1] ஊட்டச்சத்து மிக்க கருப்பு கவுனி அரி்சி அல்வா - செய்முறை!

May 27, 2024

ஊட்டச்சத்து மிக்க கருப்பு கவுனி அரி்சி அல்வா - செய்முறை!

mukesh M

கருப்பு கவுனி அல்வா!

எண்ணற்ற ஊட்டச்சத்து பல நிறைந்த கருப்பு கவுனி அரிசி பயன்படுத்தி சுவையான அல்வா ஒன்றினை மிகவும் எளிமையான முறையில தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

கருப்பு கவுனி - 100கி | வெல்லம் - 200கி | தேங்காய் பால் - 1 கோப்பை | ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன் | நெய் - 50 மில்லி | முந்திரி பருப்பு - 20

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட கவுனி அரிசியை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 12 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின் இந்த அரிசியை மிக்ஸி ஜார் ஒன்றில் 1 கப் அளவு தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

இதனிடையே எடுத்துக்கொண்ட வெல்லத்தை நன்கு பொடியாக இடித்து தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தற்போது அல்வா தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்தில் ஒரு கப் தண்ணீருடன் இந்த வெல்லம் சேர்த்து வெல்ல பாகு தயார் செய்யவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

பின் இதனுடன் அரைத்து வைத்த அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து கட்டிகள் சேராத வகையில் கிளறிக்கொண்டே இருக்கவும். தொடர்ந்து இதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

Image Source: istock

செய்முறை படி - 6

இதனிடையே மற்றொரு கடாயில் நெய்யுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

கருப்பு கவுனி அல்வா ரெடி!

பின் இந்த நெய் - முந்திரி சேர்மத்தை கடாயில் தயாராக உள்ள அல்வாவுடன் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான கவுனி அல்வா ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: அரிசி மாவு பயன்படுத்தி ‘பிரென்ச் பிரைஸ்’ செய்வோமா!

[ad_2]