Jun 7, 2024
நீர்கட்டை உடைக்கும் சுரைக்காய் பயன்படுத்தி சுவையான ரசம் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
சுரைக்காய் - 1 | தக்காளி - 2 | துவரம் பருப்பு - 1 கப் | மச்சள் - 1 சிட்டிகை | பச்சை மிளகாய் - 2 | மல்லி விதை - 1 ஸ்பூன் | மிளகு - ½ ஸ்பூன் | பூண்டு பல் - 6 | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
சீரகம் ½ ஸ்பூன் | காய்ந்த மிளகாய் - 3 | புளி - எலுமிச்சை அளவு | கடுகு - 1 ஸ்பூன் | கடலை பருப்பு - 1 ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து | பெருங்காயம் - 1 சிட்டிகை | கொத்தமல்லி - 1 கொத்து
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட சுரைக்காய், தக்காளி ஆகியவற்றை சிறு துண்டாக நறுக்கி குக்கர் ஒன்றில் சேர்க்கவும். பின் இதனுடன் துவரம் பருப்பு, மஞ்சள், பச்சை மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து 5 விசில் வர வேக வைத்து இறக்கவும்.
Image Source: istock
இதனிடையே கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், மல்லி விதை, காய்ந்த மிளகாய் சேர்த்து பதமாக வறுத்து பின் மிக்ஸி ஜார் ஒன்றுக்கு மாற்றி நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள ரசம் பொடி ரெடி!
Image Source: istock
தொடர்ந்து எடுத்துக்கொண்ட புளியை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து கரைத்து புளி கரைசல் தயார் செய்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது குக்கரில் உள்ள சேர்மங்களை நன்கு ஒரு முறை மசித்து மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின் இதனுடன் புளி கரைசல், உப்பு சேர்த்து கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
இதனிடையே மற்றொரு அடுப்பில் தாளிப்பு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம், கடலை பருப்பு சேர்த்து தாளிகவும்.
Image Source: pexels-com
பின் தாளிப்பினை அடுப்பில் கொதிக்கும் ரசத்துடன் சேர்க்கவும். தொடர்ந்து மிக்ஸியில் அரைத்த ரசப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து, இறுதியாக கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுரைக்காய் ரசம் ரெடி!
Image Source: istock
Thanks For Reading!