Jul 2, 2024
ஊட்டச்சத்து மிக்க தினை பயன்படுத்தி சுவையும் - ஆரோக்கியம் நிறைந்த கட்லெட் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
தினை - 1 கப் | பன்னீர் - 200கி | கடலை மாவு - 4 ஸ்பூன் | வெங்காயம் - 2 | இஞ்சி - 2" அளவு | பச்சை மிளகாய் - 3 | மஞ்சள் - 1 சிட்டிகை
Image Source: istock
மல்லி பொடி - 1 ஸ்பூன் | கரம் மசாலா - 1 ஸ்பூன் | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | கொத்தமல்லி - கொத்து | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட தினையை தண்ணீரில் அலசி, குக்கர் ஒன்றில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வர வேக வைத்து இறக்கவும்.
Image Source: istock
இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: pexels-com
பின் இதனுடன் வேக வைத்த தினை, பன்னீர், கடலை மாவு, மஞ்சள், கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடங்கள் வரை புளிக்க விடவும்.
Image Source: istock
தொடர்ந்து கட்லெட் பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
இதனிடையே தயாராக பிசைந்து வைத்த கட்லெட் துண்டுகளை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி கட்லெட் வடிவிற்கு தயார் செய்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் கொதிக்கும் எண்ணெயில் இந்த கட்லெட் துண்டுகளை சேர்த்து பதமாக பொரித்து எடுக்க சுவையான தினை கட்லெட் ரெடி. உங்களுக்கு பிடித்த சாஸ், சட்னியுடன் சேர்த்து பரிமாறுங்கள்!
Image Source: istock
Thanks For Reading!