[ad_1] ஊட்டச்சத்து மிக்க ‘மசூர் பருப்பு அடை’ செய்முறை!

Aug 13, 2024

BY: mukesh M, Samayam Tamil

ஊட்டச்சத்து மிக்க ‘மசூர் பருப்பு அடை’ செய்முறை!

மசூர் பருப்பு அடை!

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த மசூர் பருப்புடன் மசாலா பொருட்கள் சில சேர்த்து சுவையான அடை ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

மசூர் பருப்பு - 2 கப் | அவல் - 2 கப் | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | பச்சை மிளகாய் - 2 | தயிர் - ¼ கப் | பெருஞ்சீ

Image Source: istock

தேவையான பொருட்கள்!

பெருங்காயம் - 1 சிட்டிகை | வெங்காயம் - 2 | கேரட் - 1 | சுரைக்காய் - 1 | பசலை கீரை - 1 கொத்து | உப்பு, எண்ணெய் - போதுமான அளவு

Image Source: istock

செய்முறை படி -1

முதலில் எடுத்துக்கொண்ட மசூர் பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவு தண்ணீருடன் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், கொத்தமல்லி, கேரட், சுரைக்காய், பசலை கீரை ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி / துருவி தயார் செய்து தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

பின், ஊற வைத்த மசூர் பருப்பை மிக்ஸி ஜார் ஒன்றில் ஊற வைத்த அவல், பச்சை மிளகாய், தயிர், பெருஞ்சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

பின் இதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் - கொத்தமல்லி சேர்மங்கள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை திட நிலைக்கு கரைத்துக்கொள்ள அடை மாவு ரெடி!

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது அடை சுட்டு எடுக்க தவா ஒன்றினை அடுப்பில் வைத்து சூடேற்றி பின் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து - தடவி தயார் செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

மசூர் பருப்பு அடை ரெடி!

பின் தயாராக கரைத்து வைத்த அடை மாவினை தோசை தவாவில் சேர்த்து - பதமாக சுட்டு எடுக்க சுவையான மசூர் பருப்பு அடை ரெடி. சுட சுட ஒரு தட்டில் வைத்து உங்களுக்கு படித்த சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: சுவையான மாம்பழ லட்டு.. குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க!

[ad_2]