[ad_1] ஊட்டிக்கு இணையான ஒரு கோடை வாசஸ்தலம்; எங்கு உள்ளது தெரியுமா?

Apr 18, 2024

ஊட்டிக்கு இணையான ஒரு கோடை வாசஸ்தலம்; எங்கு உள்ளது தெரியுமா?

mukesh M

ஊட்டிக்கு மாற்றான சுற்றுலா தலம்!

கோடை விடுமுறையின் போது தமிழக மக்கள் பலரும் தங்கள் விடுமுறையை கழிக்கும் ஒரு இடமாக ஊட்டி இருக்கும் நிலையில், இந்த ஊட்டியை தவிர்த்து வேறு எங்கு செல்லலாம்? என இங்கு காணலாம்!

Image Source: instagram-com

கொடைக்கானல்!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கொடைக்கானல் ஊட்டிக்கு நிகரான சுற்றுலா பயணிகளை காணும் ஒரு கோடை வாசஸ்தலம் ஆகும். அதேநேரம், பட்ஜெட்டிற்கு உங்கள் கோடை விடுமுறையை கழிக்க ஏற்ற ஒரு இடமாகவும் இது உள்ளது.

Image Source: unsplash-com

கோத்தகிரி!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோத்தகிரி, ஊட்டியில் இருந்து சுமார் 29கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சொர்க பூமி ஆகும். ஊட்டிக்கு மிக அருகில் இருப்பதால், இதன் பெருமை பலரும் அறியாத ஒன்றாகிவிட்டது!

Image Source: unsplash-com

ஏற்காடு!

சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஏற்காடு, பட்ஜெட் பயணத்திற்கு ஏற்ற ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். அந்த வகையில் வட தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு கோடை வாசஸ்தலமாக இது பார்க்கப்படுகிறது.

Image Source: unsplash-com

ஏலகிரி!

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில்; வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் அமைந்திருக்கும் இந்த ஏலகிரி மலை ஊட்டிக்கு மாற்றான ஒரு சிறந்த தேர்வு ஆகும். கோடையிலும் குளிரும் ஒரு அதிசய கோடை வாசஸ்தலமாக இது பார்க்கப்படுகிறது.

Image Source: unsplash-com

குன்னூர்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த குன்னூர், ஊட்டியில் இருந்து சுமார் 21கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஊட்டியுடன் ஒப்பிடுகையில் இந்த குன்னூரில் உங்கள் விடுமுறையை கழிப்பதற்கான செலவு மிகவும் குறைவு!

Image Source: unsplash-com

வால்பாறை!

தேயிலை தோட்டங்கள், காபி எஸ்டேட்களுக்கு பெயர் பெற்ற இந்த வால்பாறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து சுமார் 65கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த வால்பாறை, ஊட்டிக்கு ஏற்ற ஒரு சரியான மாற்று ஆகும்!

Image Source: unsplash-com

மசினகுடி!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மசினகுடி, ஊட்டியில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பார்க்கும் இடம் எல்லாம் பசுமை என மனதை மயக்கும் ஓர் இடமாக இந்த மசினகுடி பார்க்கப்படுகிறது.

Image Source: unsplash-com

பொள்ளாச்சி!

கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பொள்ளாச்சி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 293மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தட்பவெட்ப நிலை ஆனது, நாடெங்கும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சமாக உள்ளது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கேரளாவின் ஊட்டி 'ராணிபுரம்' மலைவாசஸ்தலம் பற்றி தெரியுமா?

[ad_2]