[ad_1] ஊட்டியின் ரகசிய சுற்றுலா தளங்கள் பற்றி தெரியுமா?

Jun 10, 2024

ஊட்டியின் ரகசிய சுற்றுலா தளங்கள் பற்றி தெரியுமா?

Anoj

ஊட்டி ஹிட்டன் ஸ்பாட்

ஊட்டி சுற்றுலாவில் அனைவரும் செல்லக்கூடிய ரோஸ் கார்டன், வேக்ஸ் வேர்ல்ட் மியூசியம், முதுமலை தேசிய பூங்கா போன்ற இடங்களை தவிர்த்துவிட்டு, யாருக்குமே தெரியாத அழகிய சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க திட்டமிடுங்கள். அந்த ஹிட்டன் ஸ்பாட் பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/viewsofdineshkumar

எமரால்டு ஏரி

நீலகிரி மலைத்தொடரின் பிரம்மிப்பூட்டும் காட்சிகளை கண்டு ரசிக்க எமரால்டு ஏரிக்கு செல்லலாம். இந்த ஏரியில் பல வகையான அரிய வகை பறவைகளை காண முடியும். அதேபோல், சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தின் சிறந்த காட்சியை கண்டு ரசிக்கலாம்

Image Source: instagram-com/zostel

பார்சன்ஸ் பள்ளத்தாக்கு

இது ஊட்டியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு செல்வதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இப்பகுதியில் அரிய வகை விலங்குகளை காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இங்கு அமைந்திருக்கும் அணை அருகே திரைப்பட ஷூட்டிங்கும் நடந்துள்ளது

Image Source: instagram-com/sahana_vanangamudi

அவலாஞ்சி ஏரி

இந்த இயற்கை பேரழகு ஊட்டியில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ளது. ஏரியை சுற்றி தேயிலை தோட்டங்களும், மரங்கள் நிறைந்த வனப்பகுதியும் இருக்கின்றன. இந்த ஏரியில் ட்ரெளட் மீன்களை பிடிப்பது மக்களின் பொழுதுப்போக்கு ஆகும். இதன் அருகே முகாமிட்டு தங்கவும் செய்யலாம்

Image Source: instagram-com/tamilnadutourismofficial

கேத்தி வியூபாயின்ட்

இந்த கேத்தி வியூபாயின்ட், ஊட்டி - குன்னூர் சாலையில் அமைந்துள்ள முக்கியமான ஸ்பாட்டாகும். இங்கிருந்து கேத்தி பள்ளத்தாக்கின் சிறந்த காட்சியை கண்டு ரசிக்க முடியும். அங்கு சுற்றுலா வாசிகளுக்காக டெலஸ்கோப் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

Image Source: instagram-com/aisha_w4

க்ளென்மார்கன்

இந்த அழகிய கிராமம், ஊட்டியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது. தேயிலை தோட்டத்திற்கு பெயர்பெற்ற இந்த கிராமம், மிகவும் பாப்புலரான பிக்னிக் ஸ்பாட்டாகவும் உள்ளது. இங்கிருந்து முதுமலை தேசிய பூங்கா, மோயார் பள்ளத்தாக்கின் சிறந்த காட்சியை காண முடியும்

Image Source: instagram-com/nilgiri_stories

நீடில் வியூபாயின்ட்

இந்த வியூபாயின்ட் கூடலூர் அருகே அமைந்துள்ளது. சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ ட்ரெக்கிங் மேற்கொண்டால் இந்த வியூபாயின்ட் அடைந்துவிடலாம். இந்த சிகரம் அருகே ஊசி மலை இருப்பதால், இதனை நீடில் வியூபாயின்ட் என அழைக்கின்றனர்.

Image Source: instagram-com/entea_yathrakal

கல்ஹட்டி நீர்வீழ்ச்சி

இந்த மயக்கும் நீர்வீழ்ச்சி, ஊட்டி நகரில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ளது. கல்ஹட்டி மலையின் சரிவுகளில் அமைந்துள்ளதால், தண்ணீர் 120 அடி உயரத்தில் இருந்து கொட்டும். இது ட்ரெக்கிங் செல்ல ஏற்ற ஸ்பாட்டாகும். இங்கு செல்கையில் வன விலங்குகளை காண வாய்ப்புள்ளது

Image Source: instagram-com/artbygitesh

கெயிர்ன் ஹில்

இந்த கெயிர்ன் ஹில், அவலாஞ்சி சாலையில் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். மன அமைதியை விரும்புவோரின் விருப்பமான இடமாகும். இந்த சொர்க பூமியில் தங்கிட தனியாரின் குடிசை வீடுகளும் உள்ளன. இங்கு ட்ரெக்கிங் செல்வதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்

Image Source: instagram-com/vishnu_k_mukundan

Thanks For Reading!

Next: அமெரிக்காவின் Statue of Liberty தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்!

[ad_2]