Aug 17, 2024
ஊத்தாப்பம் என்பது பிரபலமான தென்னிந்திய உணவாகும். காலை டிபனுக்கு ஏற்ற உணவாகும். நீங்கள் ஊத்தாப்பம் செய்யும் போது கீழ்க்கண்ட டிப்ஸ்களை பின்பற்றி வரலாம். இதன் மூலம் சரியான ஊத்தாப்பத்தை சுட முடியும்
Image Source: pexels-com
ஊத்தாப்பம் சுடும் போது மாவு தண்ணியாகவோ அல்லது கெட்டியாகவோ இருக்க கூடாது. தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி சரியான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Image Source: istock
மாவு சரியான பதத்தில் புளிக்க வேண்டும். சுமார் 8-12 மணி நேரம் வரை சரியாக புளிக்க வேண்டும். மாவு சரியான பதத்தில் புளித்து இருந்தால் மட்டுமே ஊத்தாப்பம் சரியாக வரும்.
Image Source: istock
ஊத்தாப்பம் சமமாக எல்லா பக்கங்களிலும் வெந்து இருக்க வேண்டும். அப்பொழுது தான் தோசைக்கல்லில் ஒட்டாமல் வரும். தோசைக்கல்லை நடுத்தர சூட்டில் வைக்க வேண்டும்.
Image Source: istock
பொதுவாக ஊத்தாப்பம் ஊற்ற நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்துவதற்கு பதிலாக கனமான தோசைக்கல்லை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஊத்தாப்பம் பிய்ந்து போகாமல் சுட முடியும்.
Image Source: istock
ஊத்தாப்பத்திற்கு மாவை ஊற்றும் போது அதிகமாகவும் அல்லது குறைவாகவும் ஊற்றக் கூடாது. ஒரு டம்ளர் மாவை ஊற்றி பரப்பினால் போதும் சுவையான ஊத்தாப்பம் ரெடி.
Image Source: istock
ஊத்தாப்பத்தில் நிறைய வகைகள் உள்ளன. உதாரணமாக வெங்காய ஊத்தாப்பத்தில் அதிகமான வெங்காயம் சேர்த்து ஊத்தாப்பத்தை ஊற்றாதீர்கள். திருப்பி போட கஷ்டமாக இருக்கும். போதுமான அளவு மட்டுமே காய்கறிகளை பயன்படுத்தலாம்.
Image Source: istock
அதிக சூட்டில் ஊத்தாப்பம் சுடுவது ஊத்தாப்பம் கருகிப் போய் விட வாய்ப்பு உள்ளது. எனவே தீயை குறைந்த சூட்டில் வைத்து பயன்படுத்துங்கள்.
Image Source: istock
ஊத்தாப்பம் இரண்டு பக்கமும் நன்றாக வேக வேண்டும். மேற்பரப்பு நன்றாக பொன்னிறமாக வெந்த பிறகு திருப்பி போடுங்கள். முன்னரே திருப்பினால் ஊத்தாப்பம் பிய்ந்து போக வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
Thanks For Reading!