[ad_1] எடையை கட்டுக்குள் வைக்கும் ‘செவ்வாழை சூப்’ - செய்முறை!

Jul 4, 2024

BY: mukesh M

எடையை கட்டுக்குள் வைக்கும் ‘செவ்வாழை சூப்’ - செய்முறை!

செவ்வாழை சூப்!

பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படும் செவ்வாழை பயன்படுத்தி சுவையான சூப் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

செவ்வாழை - 4 | மிளகாய் துகல்கள் - ½ ஸ்பூன் | மல்லி பொடி - ½ ஸ்பூன் | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | தக்காளி - 1

Image Source: istock

தேவையான பொருட்கள்!

வெங்காயம் - 1 | ஸ்வீட் கார்ன் - 1 கப் | தயிர் - 2 ஸ்பூன் | கொத்தமல்லி - 1 கொத்து | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட வாழைப்பழத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் நன்கு மசித்து தனியே தயாராக எடுத்து வைக்கவும். அதேநேரம், ஸ்வீட் காரன்-ஐ பதமாக அவித்து எடுத்துக்கொள்ளவும்!

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித் தனியே தயாராக எடுத்து வைக்கவும்!

Image Source: pexels-com

செய்முறை படி - 3

தற்போது சூப் தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி விழுது, மிளகாய் துகல் சேர்த்து வதக்கவும்!

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்த பின் இதில் மல்லி பொடி, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கவும்!

Image Source: istock

செய்முறை படி - 5

பின் இதனுடன் நன்கு மசித்த வாழைப்பழம், தயிர், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு 5 - 7 நிமிடங்களுக்கு வதக்கி பின் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்!

Image Source: istock

செவ்வாழை சூப் ரெடி!

அடுப்பில் சூப் கொதிக்கும் நிலையில், தயாராக நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான செவ்வாழை சூப் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: வெறும் 20 நிமிடம் போதும் - வரமிளகாய் சிக்கன் கறி ரெடி!

[ad_2]