May 10, 2024
BY: Anojஊட்டச்சத்து நிறைந்க ராகி, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. அதை கொண்டு சத்தான காலை உணவான ராகி ஆப்பத்தை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/poornimastanley27
ராகி - 1 கப்; தேங்காய் துருவல் - அரை கப்; வடித்த சாதம் - கால் கப்; ஈஸ்ட் - அரை டீஸ்பூன்; நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை தொடர்ச்சியாக கிளற வேண்டும்
Image Source: istock
பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வடித்த சாதம், நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துகொள்ளவும்
Image Source: istock
அடுத்து, அரைத்த கலவையில் ராகி மாவையும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்
Image Source: istock
மாவு கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்
Image Source: pexels-com
பாத்திரத்தை மூடி சுமார் 6 முதல் 8 மணி நேரத்திற்கு மாவை புளிக்க வைத்துவிட வேண்டும்
Image Source: istock
மாவு புளித்ததும், வழக்கமான முறையில் ஆப்பம் பாத்திரத்தை எடுத்து அதில் மாவை ஊற்றி வட்ட வடிவில் கொண்டு வரவும்
Image Source: pexels-com
அதன் மேற்புறத்தில் லேசாக எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும். அவ்வுளவு தான், தயாரான ராகி ஆப்பத்தை கறி அல்லது தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்
Image Source: instagram-com/krishnakumarcmenon
Thanks For Reading!