[ad_1] ​எண்ணெய் தேய்த்து குளிக்கும் சரியான முறையும், குளிக்க கூடாத நேரங்களும்

​எண்ணெய் தேய்த்து குளிக்கும் சரியான முறையும், குளிக்க கூடாத நேரங்களும்

Jun 18, 2024

By: Nivetha

​எண்ணெய் குளியல்

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். எனினும் இதற்கான சில விதிமுறைகள் உள்ளது. அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்

Image Source: pixabay

​தலை முதல் உள்ளங்கால் வரை

நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்கு தேய்த்து 45 நிமிடங்கள் மசாஜ் செய்து இளவெயிலில் நிற்க வேண்டும். பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டும்

Image Source: pexels

நேரமின்மை

உடல் முழுவதும் தேய்த்து வெயிலில் நிற்க நேரம் இல்லை என்று கூறுவோர் உச்சந்தலை, தொப்புள், முட்டி, உள்ளங்கால் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்தும் குளிக்கலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்

Image Source: Samayam Tamil

​ஷாம்பூ வேண்டாம்

எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது ஷாம்பூ, சோப் போன்றவற்றை பயன்படுத்தினால் எண்ணெய் பிசுபிசுப்பு இருப்பது போல் ஓர் உணர்வு இருக்கும். அதனால் சீயக்காய், நலங்கு மாவு, அரப்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி குளிக்கவும்.

Image Source: pexels

​ குளிக்க கூடாத நேரங்கள்

செரிமான பிரச்சனைகள் இருக்கும் பொழுதோ, மழை காலத்திலோ, அதிகளவு காய்ச்சல், பெண்களின் மாதவிடாய் காலங்கள் உள்ளிட்ட நேரங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதனை தவிர்ப்பது நல்லது.

Image Source: pexels

​காலை 6 மணிமுதல் 7 மணி

எண்ணெய் குளியல் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் எடுத்து கொள்வது நல்லது. அதே போல் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்

Image Source: pexels

​உணவுகள்

எண்ணெய் தேய்த்து குளித்த நாளன்று அதிக செரிமான அழுத்தம் கொண்ட பரோட்டா, பர்கர், பீட்ஸா போன்ற உணவு வகைகளை தவிர்த்து விட்டு, கரிசலாங்கண்ணி, ஆவியில் வேகவைத்த உணவுகள், ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, பொன்னாங்கண்ணி போன்ற உணவுகளை சாப்பிடலாம்

Image Source: pexels

​எண்ணெய் வகைகள்

தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், பசு நெய், மூலிகை எண்ணெய்கள் உள்ளிட்டவைகளை கொண்டும் எண்ணெய் குளியல் எடுக்கலாம்

Image Source: pexels

​குறிப்பு

நல்லெண்ணெய் குளியலை சரியான வழிமுறையினை பின்பற்றாமல் எடுத்தால் உடல்ரீதியான நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்று சித்த மருத்துவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: 'Boyfriend sickness' என்றால் என்ன? இந்த அறிகுறிகளை கவனியுங்க!

[ad_2]