[ad_1] எந்தெந்த நாடுகளில் இந்தியாவின் UPI பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!

Jul 23, 2024

எந்தெந்த நாடுகளில் இந்தியாவின் UPI பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!

mukesh M, Samayam Tamil

டிஜிட்டல் பேமெண்ட்!

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது உடனடி டிஜிட்டல் கட்டண முறையாகும். இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் இந்த முறை இந்தியாவை தவிர்த்து வேறு எந்தெந்த நாடுகளில் உபயோகிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

பூட்டான்!

இந்தியாவின் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் சர்வதேசப் பிரிவான பூட்டானின் ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (RMA) ஆகியவை ஜூலை 13, 2021 அன்று பூட்டானில் BHIM UPI QR அடிப்படையிலான கட்டணங்களைச் செயல்படுத்தியது.

Image Source: unsplash-com

ஓமன்!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் (NIPL) மற்றும் ஓமன் சென்ட்ரல் பேங்க் ஆஃப் ஓமன் (CPO) ஒப்பந்தம் அக்டோபர் 4, 2022 நடைமுறைக்கு வந்தது.

Image Source: unsplash-com

மொரிஷியஸ்!

மொரிஷியஸுக்குச் செல்லும் இந்தியர்கள், UPI இணைப்பின் மூலம் உள்ளூர் வணிகங்களுக்குப் பணம் செலுத்த முடியும். மேலும் RuPay தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ய இயலும்!

Image Source: unsplash-com

இலங்கை!

இலங்கையுடனான டிஜிட்டல் பணம் செலுத்தும் இணைப்பு, இந்தியர்கள் தங்கள் UPI செயலிகளைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ள வணிக இடங்களில் QR குறியீடு அடிப்படையிலான கட்டணங்களை செலுத்தலாம்.

Image Source: unsplash-com

நேபாள்!

இங்கு மொபைல் பேங்கிங் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) ஐடி மூலம் இந்தியாவிற்கு வங்கி பரிமாற்றம் செய்யலாம். பிப்ரவரி 15, 2024 தேதியில் ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி, இந்திய ரிசர்வ் வங்கியும் நேபாள ராஸ்ட்ரா வங்கியும் ஒப்பந்தம் செய்துள்ளது.

Image Source: unsplash-com

அபுதாபி!

இரு நாட்டு ஒப்பந்தத்தின் படி இந்தியர்கள் அபுதாபி நாட்டில் UPI சேவையை பயன்படுத்தி டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும்.

Image Source: unsplash-com

பிரான்ஸ்!

பிப்ரவரி 2, 2024 அன்று இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) இ-காமர்ஸ் மற்றும் ப்ராக்ஸிமிட்டி பேமெண்ட்களைப் பாதுகாப்பதில் பிரெஞ்சு முன்னணி நிறுவனமான லைராவுடன் இணைந்து UPI பேமெண்ட் ஏற்றுக்கொள்வதை அறிவித்தது.

Image Source: unsplash-com

தென் ஆசியா!

மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், கம்போடியா, தென் கொரியா, ஜப்பான், தைவான் மற்றும் ஹாங்காங் உட்பட 10 நாடுகளில் QR-அடிப்படையிலான UPI கட்டணங்களை செயல்படுத்த இந்தியர்களுக்கு அனுமதி உண்டு.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: அசைவ உணவு பிரியரா? எந்த ஊரில் என்ன சாப்பிடலாம் பாருங்க!

[ad_2]