Jul 16, 2024
நாம் உண்ணும் உணவில் நிறைய ஒட்டுண்ணி புழுக்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? பல காய்கறிகளில் இந்த ஒட்டுண்ணி புழுக்கள் தங்கள் முட்டைகளை இடுகின்றன. இவை நோய்களை மட்டுமல்ல மூளையில் பாதிப்பை உண்டாக்குகிறது. எந்த காய்கறிகள் மூளை புழுக்கள் இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
கீரைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை நிறக் காய்கறியாகும். சில நேரங்களில் இந்த கீரைகளை அசுத்தமான மண்ணில் வளர்த்தாலோ அல்லது பாதுகாப்பற்ற நீரில் வளர்த்தாலோ அதிலுள்ள ஒட்டுண்ணிகள் நம் மூளையை பாதிக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
மிளகாயையும் அசுத்தமான நீரில் வளரும் போது அதில் பூச்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவி விட்டு மிளகாயை சமையலில் பயன்படுத்துங்கள். நன்றாக தேய்த்து கழுவும் போது தேவையற்ற பூச்சிகளை அகற்றலாம்.
Image Source: istock
ப்ரோக்கோலியில் ஒட்டுண்ணிகள் இருக்கும் அபாயங்கள் உள்ளன. அசுத்தமான மண் மற்றும் நீர் மாசுபாட்டினால் இத்தகைய பிரச்சினை ஏற்படலாம். எனவே பிரக்கோலியை சமைப்பதற்கு முன்பு வினிகர் கரைசல் அல்லது உப்பு நீரில் ஊற வைக்க வேண்டும்.
Image Source: pexels-com
பச்சை பீன்ஸ் அசுத்தமான சூழலில் வளரும் போது ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதன் ஆபத்தை குறைக்க நன்கு தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.
Image Source: istock
கேரட் கூட அசுத்தமான மண்ணில் வளரும் போது ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே கேரட்டை நன்கு தேய்த்து கழுவி அதன் பிறகு சமையுங்கள்
Image Source: istock
காய்கறிகளை ஓடும் நீரில் நன்றாக கழுவ வேண்டும். வினிகர் அல்லது உப்பு நீரில் காய்கறிகளை போட்டு ஊற வைத்து நன்றாக கழுவ வேண்டும்.
Image Source: istock
அதிக வெப்பநிலையில் காய்கறிகளை உண்பது ஒட்டுண்ணிகளைக் கொல்லலாம். எனவே பாதுகாப்பாக சமைத்து சாப்பிடுங்கள். காய்கறிகளை கழுவுவதற்கு முன்பு கைகளையும் பாத்திரங்களையும் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
காய்கறிகளை வாங்கும் போது சுத்தமான காய்கறிகளை தேர்ந்தெடுங்கள். ஆர்கானிக் காய்கறிகளை வாங்கி சுத்தமாக கழுவி சாப்பிடுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!