Aug 7, 2024
By: Nivethaதற்போதைய அவசர உலகத்தில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் நிலையில் ஆரோக்கியத்தை தக்க வைத்து கொள்வது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஒரு புறம் சரியான உணவு முறைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறும் நிலையில் மறுபுறம் உடற்பயிற்சியும் அதற்கு ஈடாக தேவைப்படுகிறது.
Image Source: pexels
ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரித்து அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதால் எடையை குறைக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள துவங்குகிறார்கள்.
Image Source: pexels
இதற்காக நாம் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்னும் நிலையில் ஏற்படுகிறது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அவரவர் வயதிற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்தால் மட்டும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
உடற்பயிற்சி செய்வதில் பல வகைகள் உண்டு, இதனுள் தங்கள் உடலுக்கேற்ற பயிற்சிகளை எதுவென்பதை உறுதி செய்துக்கொண்டு தான் பயிற்சிகளை துவங்க வேண்டும். மேலும் இதில் ஒவ்வொரு வயதிற்கு ஒவ்வொரு வித உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்னும் விதியும் உள்ளதாம். அது குறித்து இப்பதிவில் காண்போம்.
Image Source: pexels
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அவரவர் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. அப்படி இருக்கையில், 5 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் தண்டால் தூக்குதல், பஸ்கி, பளூ தூக்குதல், குறுவேக ஓட்டம் போன்ற பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம்.
Image Source: pexels
காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் வெந்நீரில் 2 டீஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து குடிக்க வேண்டும். அதன் பின்னர் உடற்பயிற்சி செய்து முடித்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிதமான சூடுள்ள வெந்நீரில் குளிக்க வேண்டும்.
Image Source: pexels
அடுத்ததாக 25 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் அளவாக தண்டால் எடுப்பது, தினமும் கடற்கரை மணலில் நடைப்பயிற்சி, யோகா, தியானம், மூச்சு பயிற்சி போன்றவைகளை செய்யலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: pexels
இதுவே 40 வயதை கடந்தோர் அமர்ந்த நிலையில் யோகா, மூச்சு பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காலை மற்றும் மாலை என 2 வேளைகளிலும் தவறாமல் செய்தால் நல்ல பலன் மற்றும் மன அமைதி கிடைக்கும்.
Image Source: pexels
50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள் தினமும் 15-30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது என்று கூறப்படுகிறது. ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடற்பயிற்சியாளரை அணுகி தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.
Image Source: pexels
Thanks For Reading!