[ad_1] என்ன? இந்த நாட்டுக்கு சுதந்திர தினம் என்பதே இல்லையா!

Aug 16, 2024

என்ன? இந்த நாட்டுக்கு சுதந்திர தினம் என்பதே இல்லையா!

mukesh M

சுதந்திர தினம் இல்லா நாடுகள்!

ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடப்படும் நிலையில், இதுபோன்ற சுதந்திர தினம் எனும் சிறப்பு தினத்தை கொண்டில்லா நாடுகள் ஒரு சிலவற்றைப் பற்றி இங்கு காணலாம்!

Image Source: pexes-com

நேபாளம்!

மற்ற நாடுகளை போல் நேபாளத்தில் சுதந்திர தினம் அனுசரிக்கப்படுவது இல்லை. இதற்கு காரணம், இதன் குறுகிய அளவிலான நிலப்பரப்பு காரணமாக, மேற்கத்திய நாடுகளின் கண் பார்வையில் இருந்த தப்பித்தது தான்!

Image Source: pexes-com

இங்கிலாந்து!

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இங்கிலாந்தில் இன்று வரையிலும் மன்னர் ஆட்சி தான். இதன் காரணமாக இங்கு சுதந்திர தினம் இல்லை; இருப்பினும் ஜூன் 11-ஆம் நாள் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது!

Image Source: pexels-com

டென்மார்க்!

பிற நாடுகளால் ஆக்கிரமிப்புக்கு கீழ் செல்லாத ஒரு நாடாக டென்மார்க் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கும் சுதந்திர தினம் என்று ஒன்று இல்லை. இருப்பினும் ஜூன் 5-ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக இவர்கள் கொண்டாடுகின்றனர்!

Image Source: pexes-com

தாய்லாந்து!

19-ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை தென்கிழங்கு ஆசிய பகுதிகள் மேற்கத்திய நாடுகளின் அதிகாரத்திற்கு கீழ் சென்ற போதும், தாய்லாந்து ஒரு சுதந்திரமான நாடாக இருந்தது. இதன் காரணமாக இங்கும் சுதந்திர தினம் இல்லை, மாறாக டிசம்பர் 5, தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது!

Image Source: pexes-com

கனடா!

ஜூலை 1, 1867 அன்று பிரிட்டிஷ் வட அமெரிக்க சட்டம் (BNA) கனடாவின் டொமினியை ஒரு சுய-ஆளும் அங்கமாக அறிவித்து. இருப்பினும் இந்த ஜூலை 1-ஆம் தேதிதை கனடா சுதந்திர தினமாக கொண்டாடவில்லை; கனடா தினமாக கொண்டாடுகிறது!

Image Source: pexes-com

பிரான்ஸ்!

இங்கிலாந்து போன்றே பிரான்ஸ் நாடும் அநேக நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஒரு நாடு. இதன் காரணமாக இங்கும் சுதந்திர தினம் இல்லை.

Image Source: pexes-com

சீனா!

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கருதப்படும் சீனா, ஒருபோதும் முழுமையான காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்படவில்லை. உள்நாட்டு புரட்சிகள் பல இருப்பினும், வெளிநாட்டின் ஆதிக்கம் இல்லை - இதன் காரணமாக இங்கும் சுதந்திர தினம் இல்லை!

Image Source: pexes-com

ரஷ்யா!

1922 - 91 வரையில் சோவியத் யூனியனாக (USSR) இருந்து பின் பல்வேறு சிறு நாடுகளாக பிரிய, ரஷ்யா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, மால்டோவா உள்ளிட்ட நாடுகள் பிறந்தன. இதில் ரஷ்யா பிற நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல், சுதந்திர தினம் இல்லா நாடாக இருக்கிறது!

Image Source: pexes-com

Thanks For Reading!

Next: இன்டர்வியூவில் சரியான சம்பளத்தை கேட்டுப்பெறுவது எப்படி?

[ad_2]