Jun 3, 2024
எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் பழக்கத்தின் பெயரில் பொய் சொல்பவர்கள் இவர்கள். சில சமயங்களில் இவர்களே அந்த பொய்யை நம்பத் தொடங்கிவிடுவர்.
Image Source: unsplash-com
இவர்கள் தனிப்பட்ட லாபத்திற்காக அல்லது மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தோடு மிகவும் விரிவான பொய்களை வரிசையாக அடுக்குபவர்கள்.
Image Source: unsplash-com
ஒருவரது உணர்வுகளைக் காக்கும் நோக்கிலோ அல்லது பிரச்சனைகளைத் தவிர்க்கவோ சிறிய பொய்களைச் சொல்பவர்கள் இவர்கள். பெரும்பாலும் பெரிய பாதிப்புகளை உண்டாக்காதவை.
Image Source: unsplash-com
தங்களது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும் பிறரை மூளைச்சலவை செய்யவும் பொய் கூறுபவர்கள். மேலும் தனது தவற்றுக்கு மற்றவர்கள் மேல் பொய்யாகப் பழி சுமத்துபவர்கள்.
Image Source: pexels-com
தான் செய்த தவற்றைப் பற்றி மற்றவர் கேள்வி கேட்கும் போது தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பொய் சொல்பவர்கள். பெரும்பாலும் மறுத்தும் விரோதமாகவும் பேசுபவர்கள்.
Image Source: unsplash-com
தான் பொய் பேசவில்லை உண்மையைத் தான் மறைத்தேன் என்கிற சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் இவர்கள். மறைக்கப்பட்ட உண்மையும் ஒரு பொய் தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
Image Source: unsplash-com
சூழ்ச்சி நோக்கில் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களைப் பயன்படுத்தி லாபமடையவும் பொய்யுரைப்பவர்கள்.
Image Source: unsplash-com
மாட்டிக்கொள்வோம் என்கிற புரிதலே இல்லாமல் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னிச்சையாகப் பொய் சொல்பவர்கள். பொய்யான வாக்குறுதிகளைப் போகிற போக்கில் வழங்குபவர்கள்.
Image Source: unsplash-com
நேரடியாக பொய்யுரைக்காமல், உண்மைகளை மறைத்து அல்லது தவிர்த்துப் பேசுபவர்கள். எந்தவொரு கேள்விக்குத் தெளிவான பதில் இவர்களிடமிருந்து வராது.
Image Source: unsplash-com
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அல்லது எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க பயத்திலும் பதட்டத்திலும் பொய் கூறுபவர்கள்.
Image Source: unsplash-com
Thanks For Reading!