Aug 19, 2024
இளமை தோற்றத்துக்கு உதவும் ஒரு எளிய உடற்பயிற்சியாக யோகாசனங்கள் பார்க்கப்படும் நிலையில், சரும சுருக்கம் - மென்கோடுகள் போன்ற வயது மூப்பு அறிகுறிகளை தடுக்கும் யோகாசனங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
Fish Pose என அழைக்கப்படும் இந்த மத்ஸ்யாசனம் கழுத்து பகுதி, முழுகு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு அழுத்தம் அளித்து, சருமம் தளர்வடைவதை தடுக்கிறது!
Image Source: instagram-com/missg
மத்ஸ்யாசனத்தை தொடர்ந்து முயற்சித்து வர சருமத்தில் (குறிப்பாக கன்னத்தில்) காணப்படும் சுருக்கங்கள் படிப்படியே குறையும். மேலும், இடுப்பு பகுதியில் சேரும் கொலஸ்ட்ரால் கரைத்து மெலிந்த தோற்றத்துடன் காட்சியளிக்கலாம்!
Image Source: istock
சுவாச பிரச்சனைகளை போக்கும்; அடிவயிற்று கொழ்ப்பு, உடல் பருமன், சீரான உடல் தோரணை போன்றவற்றுக்கு உதவுவதோடு சீரான செரிமான செயல்பாட்டுக்கும் இந்த ஆசனம் உதவியாக இருக்கும்!
Image Source: istock
இளமை தோற்றத்தை மீட்டு தரும் இந்த மத்ஸ்யாசனத்தை அளவுக்கு மிகுதியாக முயற்சிப்பது கழுத்து வலி, முதுகுத்தண்டு வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
தலையில் முழு பாரத்தை சேர்த்து தலைகீழாக நின்றபடி செய்யும் இந்த ஆசனம் ஆனது, மூளை உள்ளிட்ட உடல் பகுதிகளில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து இளமை தோற்றத்துக்கு உட்புற உதவி செய்கிறது!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த சிரசாசனம் குடல் பகுதி, கல்லீரல், இதயம், பித்தப்பை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் கழிவுகளை திறம்பட நீங்கி, உடல் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்தை உறுதி செய்து இளமையுடன் வாழ உதவி செய்கிறது!
Image Source: istock
சிரசாசனத்தின் முறையான பயிற்சி ஆனது உடல் எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது. குறிப்பாக மூட்டுகள், எலும்புகள், சவ்வுகளின் உறுதியை உறுதி செய்து சீரான உடல் தோரணைக்கு உதவி செய்கிறது!
Image Source: istock
சருமத்தில் மென் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சிரசாசனம் ஆனது மன அழுத்தம் போக்கும் ஹார்மோன் சுரப்பை தூண்டி இளமை தோற்றத்துக்கு மறைமுகமாக உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!