Aug 5, 2024
நம்மில் பலருக்கும் இளமை பருவத்திலே சுருக்கங்கள், கோடுகள் உண்டாகி வயதான தோற்றம் ஏற்படுகிறது. இது சரும அழகை முற்றிலுமாக கெடுக்கக்கூடும். சருமம் வயதாகுவதை மெதுவாக்கும் பியூட்டி டிரிங்க் செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
நெல்லிக்காய் சாறு - 1 கப் ; மாதுளை ஜூஸ் - 1 கப் ; மஞ்சள் - 1 டீஸ்பூன்; தேன் - 1 டீஸ்பூன்; இஞ்சி - அரை இன்ச்; எலுமிச்சை - அரை பழம்; மிளகு - கால் டீஸ்பூன்; புதினா - சிறிதளவு; வெதுவெதுப்பான தண்ணீர் - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் அகலமான பவுல் ஒன்றில், 1 கப் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் 1 கப் மாதுளை சாற்றை மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: istock
அடுத்து, 1 டீஸ்பூன் மஞ்சளை ஜூஸ் கலவையில் சேர்க்க வேண்டும். அவற்றில் கட்டிகள் இல்லாத வகையில் தொடர்ச்சியாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
Image Source: istock
பானத்தின் சுவையை அதிகரிக்க 1 டீஸ்பூன் தேன் தேர்க்க வேண்டும். தேன் கலவையில் கரையும் வரை நன்றாக மிக்ஸ் செய்யவும்
Image Source: pexels-com
இஞ்சியை நன்றாக துருவி, அதன் சாற்றை வடிகட்ட வேண்டும். அரை டீஸ்பூன் இஞ்சி சாற்றை கலவையில் மிக்ஸ் செய்ய வேண்டும். அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு பலனளிக்கும்
Image Source: istock
அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதன் சாற்றை கலவையில் சேர்க்க வேண்டும். அதில் வைட்டமின் சி மட்டுமின்றி புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் உள்ளன
Image Source: istock
இறுதியாக, கால் டீஸ்பூன் கருப்பு மிளகை தூவ வேண்டும். இது சத்துக்கள் உறிஞ்சுவதை அதிகரிப்பதோடு பானத்தின் சுவையை மேம்படுத்தக்கூடும்
Image Source: istock
இந்த கலவையை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அதன் மீது புதினா இலைகளை தூவி, காலையில் குடிக்க வேண்டும். இது சரும செல்கள் புத்துயிர் பெற உதவிப்புரிந்து வயதாகுவதை தடுக்க செய்கிறது
Image Source: pexels-com
Thanks For Reading!