Jul 13, 2024
கொரியன் ரைஸ் ஜெல் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்ய உதவுகிறது. இது சரும சுருக்கங்களையும் சருமக் கோடுகளையும் போக்குகிறது. இதன் மூலம் சருமம் என்றும் இளமையாக இருக்கும். இந்த அரிசி ஜெல்லை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
Image Source: pexels-com
1 கப் அரிசி, 2 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் விட்டமின் ஈ ஆயில், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 2-3 சொட்டுகள் அத்தியாவசிய எண்ணெய்கள்
Image Source: istock
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு குளிர்ந்த நீரில் அரிசியைக் கழுவிக் கொள்ளுங்கள். தூசிகள் மற்றும் அழுக்குகளை நீக்கிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
கழுவிய அரிசியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். 30 நிமிடங்கள் ஊற வையுங்கள். இப்பொழுது அரிசி மென்மையாக மாறி அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இறங்கி விடும்.
Image Source: istock
இப்பொழுது ஊற வைத்த அரிசியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொதிக்க விடுங்கள். கொதிக்கும் போது மிதமான தீயில் வைத்து 15-20 நிமிடங்கள் வேக வையுங்கள்.
Image Source: istock
இப்பொழுது வேக வைத்த அரிசியை ஆற விட்டு, மிக்சி ஜாருக்கு மாற்றி நன்றாக அரைத்துகொள்ளவும். க்ரீம் பதத்தில் வர வேண்டும். பிறகு, அதனை வடிகட்டினால் மென்மையான பதத்தில் ரைஸ் ஜெல் கிடைத்து விடும்.
Image Source: istock
இதனுடன் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து கொள்ளுங்கள். கற்றாழை ஜெல் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. கிளிசரின் மாய்ஸ்சரைசிங் தன்மையை தக்க வைக்கிறது.
Image Source: istock
இதனுடன் தேன் மற்றும் விட்டமின் ஈ ஆயில் சேருங்கள். தேன் சரும ஈரப்பதத்தை தக்க வைத்து சருமம் இளமையுடன் இருக்க உதவுகிறது. விட்டமின் ஈ எண்ணெய் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. ரோஸ் வாட்டர் மற்றும் 2-3 சொட்டுகள் அத்தியாவசிய எண்ணெய் சேருங்கள்.
Image Source: istock
இந்த கொரியன் ஆன்டி ஏஜிங் ரைஸ் ஜெல்லை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து சிறுதளவு எடுத்து கழுத்து, முகத்தில் அப்ளை செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!