Jul 5, 2024
எலக்ட்ரோலைட் எனப்படுவது நம் உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு உதவும் தாதுக்கள் ஆகும். மனித ஆரோக்கியத்திற்கு அவசியமாக இருக்கும் இந்த எலக்ட்ரோலைட்களை இயற்கை வழியில் (உணவுகள் வழியே) பெறுவது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
பால் சார்ந்த பொருட்களில் கால்சியமும், சோடியமும் நிறைந்துள்ளது. பீன்ஸ், சோயா, பாதாம் பருப்பு போன்றவற்றிலும் எலக்ட்ரோலைட் குறைப்பாட்டை சமநிலைப்படுத்தும் பண்புகள் உள்ளன.
Image Source: istock
எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு போன்றவற்றில் நமது உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. அவகேடாவில் அதிக பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இது எலக்ட்ரோலைக் குறைபாட்டை சமநிலைப்படுத்துகிறது.
Image Source: istock
இளநீரைப் போன்று தர்பூசணியிலும் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் தர்பூசணியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது எலக்ட்ரோலைட் குறைபாட்டை சரி செய்யும்.
Image Source: istock
தற்போது சந்தைகளில் எலக்ட்ரோலைட் பானங்கள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையோடு பொட்டாசியம், சோடியம், குளோரைடு, மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்த பானங்களை தேர்ந்தெடுத்து குடிக்கலாம்.
Image Source: istock
நமது உடலில் எலக்ட்ரோலைட் குறைபாட்டை சரி செய்ய இளநீர் உதவுகிறது. இதில் நமது உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.மேலும் வாழைப்பழங்களில் அதிக பொட்டாசியம் இருப்பதால் எலக்ட்ரோலைட் குறைபாட்டை சரி செய்கிறது.
Image Source: istock
நமது உடலில் எலெக்ட்ரோலைட் சமநிலையில் இல்லை என்றால் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறு, வாந்தி, இதயத்துடிப்பில் மாற்றம் போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொள்ளலாம்.
Image Source: istock
அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், உடல் சோர்வு, தசை பிடிப்புகள், சிறுநீரகப் பிரச்சினை, மனசோர்வு, மன குழப்பம், இரத்த அழுத்த மாற்றம் போன்றவை எலக்ட்ரோலைட் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
Image Source: pexels-com
நமது உடலில் எலக்ட்ரோலைட் குறைபாடு ஏற்படுவதற்கு நீர் சத்து குறைபாடு மிக முக்கிய காரணம். குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, வெப்பமான சூழ்நிலைகளை தவிர்த்தல் போன்றவை எலெக்ட்ரோலைட் குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!