[ad_1] எலிகள் மூலம் பரவும் நோய்கள் என்னென்ன? இதை தடுப்பது எப்படி?

May 11, 2024

எலிகள் மூலம் பரவும் நோய்கள் என்னென்ன? இதை தடுப்பது எப்படி?

mukesh M

எலிகள் மூலம் பரவும் நோய்!

எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் கொடிய நோய்கள் என்னென்ன? எந்தெந்த வழிகளில் இந்த நோய்கள் மனிதர்களை தாக்குகிறது? என்பது குறித்து விரிவாக இங்கு நாம் காணலாம்.

Image Source: pexels-com

எலிக்கடி காய்ச்சல்!

எலிக்கடி மற்றும் எலிகளின் கீறல்கள் போன்றவற்றின் காரணமாக மனிதர்களை தாக்கும் ஒரு காயச்சலாக இது பார்க்கப்படுகிறது. மூளை காய்ச்சல் வரை அழைத்து செல்லும் இந்த காய்ச்சலுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை நல்லது.

Image Source: istock

பிளேக்!

எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய மிக கொடிய நோயாக பிளேக் நோய் பார்க்கப்படுகிறது. மிகவும் அரிதாக தோன்றும் ஒரு நோய் என்றாலும், பாதித்த பின் தொற்று நோயாக பரவும் ஒரு நோயாக இது உள்ளது.

Image Source: istock

லெப்டோஸ்பிரோசிஸ்!

லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படுவது எலிகள் மூலம் பரவும் ஒரு வகை பாக்டீரியா தொற்று ஆகும். எலிகளின் எச்சம், எச்சில் பட்ட அசுத்தமான நீரை உட்கொள்வது இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

பாதிப்புகள் என்ன?

நிபுணர்கள் கூற்றுப்படி இந்த லெப்டோஸ்பிரோசிஸ் பிரச்சனை ஆனது, சிறிய காய்ச்சல் துவங்கி சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற கொடிய பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

சால்மோனெல்லோசிஸ்!

சால்மோனெல்லோசிஸ் எனப்படுவது எலிகளின் மலம் வழியே பரவும் ஒரு வகை பாக்டீரியா தொற்று ஆகும். காய்ச்சல், அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த பிரச்சனையின் விளைவுகள் ஆகும்.

Image Source: istock

LCMV வைரஸ் பாதிப்பு!

LCMV எனப்படுவது லிம்போசைடிக் கோரியோமெனிங்கிடிஸ் வைரஸ் தொற்றை குறிக்கிறது. குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகளில் துவங்கி மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி போன்ற பிரச்சனைகள் வரை உண்டாக்குகிறது.

Image Source: istock

ஹாண்டவைரஸ்!

வெள்ளை எலிகளில் பொதுவாக காணப்படும் ஒரு வைரஸ் இந்த ஹாண்டவைரஸ். இடுப்பு, முதுகு மற்றும் தொடைகளில் கடுமையான வலி உண்டாகும் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியோ, சிகிச்சையோ இல்லை!

Image Source: istock

தற்காத்துக்கொள்வது எப்படி?

எலிகள் வழியே மனிதர்களை தாக்கும் இந்த பிரச்சனைகளை தவிர்க்க எலிகளின் நடமாட்டத்தை குறைப்பது அவசியம். உணவுகளை எலிகளின் பார்வையில் படாத வகையில் பதப்படுத்தி வைத்து, தற்காத்துக்கொள்வது அவசியம்.

Image Source: istock

Thanks For Reading!

Next: உடல் எடையை குறைக்க உதவும் 'சட்னி' வகைகள்

[ad_2]