[ad_1] எலுமிச்சை கொண்டு இப்பொருட்களை சுத்தம் செய்ய கூடாது, ஏன் தெரியுமா ?

எலுமிச்சை கொண்டு இப்பொருட்களை சுத்தம் செய்ய கூடாது, ஏன் தெரியுமா ?

Aug 16, 2024

By: Nivetha

எலுமிச்சை

எலுமிச்சை பழம் என்பது ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை நமக்கு கொடுக்கும் ஓர் கனி. இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடிக்கலாம், சமையலிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

Image Source: istock

குடும்ப தலைவிகள்

ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்ப தலைவிகள் எலுமிச்சை பழங்களை இதர பயன்பாடுகளோடு சுத்தம் செய்யும் போதும் பயன்படுத்துகிறார்கள். சமையலறை கறைகள், அழுக்குகளை நீக்கவும், அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு நல்ல மணம் அளிக்கவும் எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது.

Image Source: istock

சேதம்

பூஜை சாமான்கள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை கூட எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்து பளிச்சிட செய்கிறோம். ஆனால் ஒருசில பொருட்களை எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்தால் சேதம் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து இப்பதிவில் காண்போம்.

Image Source: istock

மார்பிள், கிரானைட்

இயற்கையாக உருவாகக்கூடிய இந்த மார்பிள், கிரானைட் கற்களை நாம் அழகுக்காக தரை, கவுண்டர் டாப் உள்ளிட்ட பகுதிகளில் பதிக்கிறோம். இதனை எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்தால் அதிலிருக்கும் ஆசிட் கற்களில் சரிசெய்ய முடியாத விரிசல்களை உருவாக்கலாம், அதன் நிறத்தை மங்க செய்து பளபளப்பினை போக்கிவிடக்கூடும். எனவே இந்த கற்களை PH நியூட்ரல் கிளீனர் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்த முறையாகும்.

Image Source: istock

கத்தி

நமது சமையலறையில் இருக்கும் ஹை கார்பன் ஸ்டீலில் செய்யப்பட்டிருக்கும் கத்திகளை எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்தால் அதிலிருக்கும் ஆசிட் கத்தியை ஆக்சிடைல் செய்து கூர்மையை குறைத்து விடும். எனவே கத்தியை டிஷ்வாஷ் பாரில் சுத்தம் செய்தாலே போதுமானது.

Image Source: istock

மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள்

சமையலறையில் காய்களை வெட்டும் மரப்பலகைகள் போன்ற பொருட்களை எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்யும் பட்சத்தில் அந்த பழத்தில் இருக்கும் ஆசிட் மர பலகைகளில் வறட்சியை ஏற்படுத்தி வெடிப்புகள் உண்டாக செய்துவிடும். எனவே, கிச்சனில் இருக்கும் மரப்பொருட்களை சோப் போட்டு கழுவி, துடைத்து அதில் சிறிது எண்ணெய் தடவி வைத்தால் நீண்டநாட்கள் பயன்படுத்தலாம்.

Image Source: istock

அலுமினியம்

அலுமினிய சாமான்களை எலுமிச்சை வைத்து சுத்தம் செய்தால் அதன் நிறம் மங்கி, பளபளப்பு குறைந்து விடும். மேலும் அதில் சிறு சிறு துளைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம். எனவே எலுமிச்சை கொண்டு அலுமினிய சாமான்களை சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Image Source: pexels

காஸ்ட் அயர்ன் பான்

இந்த வகை பான் நமது இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஏனெனில் இதில் சமைத்தால் அதன் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்து கொள்ளும், அதுமட்டுமில்லாமல் நீண்டநாட்கள் உழைக்கக்கூடியது. எனவே இதனை லெமன், சோப் உள்ளிட்டவை போட்டு சுத்தப்படுத்தாமல் வெந்நீர் ஊற்றி ப்ரெஷ் வைத்து தேய்த்து கழுவினால் அதுவே போதும்.

Image Source: pexels

காரணம்

இந்த வகை பான்களில் சமையல் பொருட்கள் ஒட்டாமல் இருக்கவும், துரு பிடிக்காமல் இருக்கவும் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் ஒட்டப்பட்டிருக்குமாம். இதனை லெமன் கொண்டு சுத்தம் செய்தால் அதிலிருக்கும் அமிலம் அந்த எண்ணெய் போன்ற பொருளை உரித்து எடுத்து விடும் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: நமது இலக்கையினை அடைய தேவைப்படும் விஷயங்கள் என்னென்ன ?

[ad_2]