Jun 10, 2024
எலுமிச்சை, சியா விதை என இரண்டும் தனித்தனி ஆரோக்கிய நலன்கள் பல கொண்டிருக்க - இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மை - தீமை என்ன? என்று இங்கு காணலாம்!
Image Source: istock
சியா விதை மற்றும் எலுமிச்சையில் உள்ள பண்புகள் நமது உடல் நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் உண்டாகும் தலைவலியை தடுக்க இது உதவியாக இருக்கும்.
Image Source: pexels-com
இந்த சியா விதை மற்றும் எலுமிச்சைகளில் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துக்கள், மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாச ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்; ஊட்டச்சத்து குறைபாடு உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது!
Image Source: istock
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அந்த வகையில் மலச்சிக்கல் - அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் இந்த சியா விதைகளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருக நல்ல பலன் கிடைக்கும்!
Image Source: istock
சியா விதைகளில் புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்திருப்பதால் நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் இது கோடை காலத்தில் நீரிழப்பு காரணமாக ஏற்படும் சோர்வினைப் போக்கி நமது உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது.
Image Source: istock
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்திருப்பதால் இதனை உட்கொண்ட பிறகு மற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற நாட்டம் குறைகிறது. மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கிய உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
Image Source: istock
எலுமிச்சையில் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
Image Source: istock
சியா விதைகளில் நார்ச்சத்து, புரதச்சத்து மட்டுமல்லாது கால்சியமும் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகள் மற்றும் பற்களில் கால்சிய குறைபாடு தடுக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
சியா விதைகள் மற்றும் எலுமிச்சையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள வீக்கத்தை சரி செய்யவும், கீல்வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும் சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!