Jul 4, 2024
By: Nivethaஎலுமிச்சை பழங்கள் ஜூஸ் போட்டு குடிப்பது முதல் வீட்டில் பூஜை பாத்திரங்களை கழுவது வரை பயன்படுத்தப்படுகிறது. கோடை காலத்தில் இதன் விலை சற்று மலிவாக கிடைக்கும், மற்ற நேரங்களில் இதனை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.
Image Source: pixabay
பல பயன்பாடுகளுக்கு உதவும் இந்த எலுமிச்சைகளை வீட்டில் சேமித்து வைக்கும் வழக்கம் நம்முள் பலருக்கு உண்டு. அவர்களுக்கான பதிவு தான் இது.
Image Source: istock
எலுமிச்சை பழங்களை வாங்கும் பொழுது ஃப்பிரஷ்ஷாக இருக்கிறதா என்றும், அதன் தோல் மெல்லியதாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஏனெனில், மெலிதான தோல் கொண்ட எலுமிச்சைகளில் சாறு அதிகமாக கிடைக்கும்.
Image Source: pixabay
எலுமிச்சைகளை நன்றாக கழுவி, ஈரமில்லாமல் உலர்த்தி எடுத்து அதனை காற்று புகாத ஏர் டைட் கண்டைனர்களில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். இப்படி வைத்தால் எலுமிச்சை பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமலும், வாடாமலும் இருக்கும்.
Image Source: pexels
நன்கு கழுவி காயவைத்த எலுமிச்சைகளை பாலிதீன் பைகளில் போட்டு அதன் பின்னர் ஏர் டைட் கண்டைனரில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்தாலும் எலுமிச்சைகள் காயாமல் இருக்கும்.
Image Source: istock
நீண்ட நாட்கள் எலுமிச்சைகள் கெட்டு போகாமல் இருக்க அதன் மீது எண்ணெய் தடவி ஒரு டப்பாவில் போட்டும் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
Image Source: pexels
ஜிப் லாக் கவர்கள் மிக எளிதாக மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் எலுமிச்சைகளை போட்டும் ஃபிரிட்ஜில் வைக்கலாம். எலுமிச்சைகள் வாடாமல், கெட்டு போகாமல் ஃப்பிரஷ்ஷாக இருக்கும்.
Image Source: pixabay
எலுமிச்சைகளை அலுமினிய ஃபாயில்களில் நன்கு சுற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும். இதன் மூலம் எலுமிச்சையின் ஈரப்பதம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக எலுமிச்சை பழங்களும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
Image Source: pexels
அமிலத்தன்மை நிறைந்த எலுமிச்சை பழங்களை நாம் எப்பொழுதும் சரியான வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பழங்கள் வாடி, கெட்டு போய்விடும்.
Image Source: pexels
Thanks For Reading!