Jun 24, 2024
நாம் எலுமிச்சை சாறினை குடிக்கும் பொழுது இடையில் வாயில் வரும் விதைகளை வெளியில் துப்புவோம். ஆனால் அதிலுள்ள நன்மைகளை இப்பதிவில் நாம் காணவுள்ளோம்.
Image Source: pexels
எலுமிச்சை விதைகளில் சாலிசிலின் என்னும் அமிலம் உள்ளது. இது ஆஸ்பிரின் என்னும் வலி நிவாரணி மருந்து தயாரிப்புகளின் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது உடலில் ஏற்படும் வலிகளை நீக்க வல்லது.
Image Source: istock
வைட்டமின்-சி இந்த விதைகளில் அதிகமுள்ளது. இது உங்கள் உடலில் கொலாஜென் சுரப்பினை அதிகரிக்கிறது, அதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவதோடு, சரும ஆரோக்கியமும் மேம்படும்.
Image Source: istock
சிறிது எலுமிச்சை விதைகளை எடுத்து லேசாக இடித்து அதனை பாலில் கலந்து குடித்தால் செரிமான அமைப்பிலுள்ள உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒட்டுணிகளை அழிக்கும்.
Image Source: pexels
எலுமிச்சை விதைகளை பேஸ்ட் போல் நன்றாக அரைத்து நகசுத்தி பாதிப்புள்ள பகுதிகளில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
Image Source: pexels
எலுமிச்சை விதைகளில் பெக்டின் என்னும் நார்சத்து உள்ளது. இது உங்கள் உணவுகளிலுள்ள கொழுப்புகள் உறிஞ்சுவதை தடுக்கிறது. அதனால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.
Image Source: pexels
இந்த விதைகளில் உள்ள வைட்டமின்-சி சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
Image Source: istock
எலுமிச்சை விதைகளை நசுக்கி தேனில் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகும். இதனை உடல் முழுவதுமே ஸ்க்ரப் போல் பயன்படுத்தலாம்.
Image Source: istock
எலுமிச்சை விதைகளை ஒருகைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடலிலுள்ள நச்சுத்தன்மை வெளியேறும். சிறுநீர் தொற்று ஏற்பட்டாலும் இந்த நீரினை அப்பகுதியில் ஊற்றி சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Image Source: pexels
Thanks For Reading!