Jun 19, 2024
இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் புத்தகங்கள் எழுதி - வெளியிட்டுள்ள நிலையில், அவர்களுள் ஒரு சிலர் குறித்தும் - அவர்களது புத்தகங்கள் குறித்தும் இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com
பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது பிரசவகால அனுபவங்களை தொகுத்து Kareena Kapoor Khan's Pregnancy Bible எனும் புத்தகத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார்.
Image Source: instagram-com
கன்னட திரையுலகின் மாஸ் நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர், தனது தந்தையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து Dr Rajkumar : The Person Behind The Personality எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்!
Image Source: instagram-com
பாலிவுட் பிரபலம் நவாசுதீன் சித்திக், கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் An Ordinary Life: A memoir எனும் புத்தகத்தை எழுத்தாளர் ரித்துபர்ணா சாட்டர்ஜி உடன் இணைந்து எழுதி - வெளியிட்டார்.
Image Source: instagram-com
உலக நாயகன் கமலஹாசன் தனது திரை படைப்பான ஹேராம் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டதோடு, தாயம், ஹிந்துஸ்தானி போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
Image Source: instagram-com
பாலிவுட் நடிகை டுவிங்கிள் கன்னா ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். Mrs Funnybones, Pyjamas Are Forgiving, THE LEGEND OF LAKSHMI PRASAD, Welcome to Paradise போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.
Image Source: instagram-com
நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அனுபம் கெர்; Your Best Day Is Today!, Lessons Life Taught Me, Unknowingly, The Best Thing about You Is You! போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
Image Source: instagram-com
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெ ஜெயலலிதா அவர்கள் புத்தகங்கள் மீது அதிகம் காதல் கொண்டவர். எழுத்துக்கள் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் வகையில் உறவின் கைதிகள் எனும் நாவலை இவர் எழுதினார்.
Image Source: instagram-com
கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான பார்த்திபன் எழுத்துக்களில் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இதில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘கிறுக்கல்கள்’ பலரும் ஆர்வமாக தேடி படித்த ஒரு புத்தகம் ஆகும்!
Image Source: instagram-com
Thanks For Reading!