[ad_1] ஏன் புத்திசாலிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை தெரியுமா?

ஏன் புத்திசாலிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை தெரியுமா?

Aug 10, 2024

By: Nivetha

புத்திசாலிகள்

புத்திசாலிகள் மகிழ்ச்சியாக இருப்பார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக வருகிறது. ஒருவன் புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு வெற்றி, பணம், மகிழ்ச்சி போன்ற அனைத்தையும் கொடுத்துவிடும் என்று பலரும் கூறும் நிலையில் பெரும்பாலான புத்திசாலிகள் வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

Image Source: istock

பல்வேறு அம்சங்கள்

புத்திசாலித்தனம் என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது, அந்த பண்பினை எளிதாக அளவிட முடியாது. பகுத்தறியும் திறன், கற்பனை திறன், உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் இந்த புத்திசாலித்தனத்தில் அடங்கும்.

Image Source: istock

மகிழ்ச்சி

புத்திசாலிகளுக்கு அந்தஸ்து, பணம் என அனைத்தும் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது இருக்காது. அது ஏன், அதற்கான காரணங்கள் என்ன என்பதையெல்லாம் தான் நாம் தற்பொழுது இப்பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

Image Source: pixabay

காரணங்கள்

புத்திசாலிகளுக்கு பல்வேறு திறமைகள் இருக்கும். அந்த திறமைகளை எப்படி பயன்படுத்துவது, எதில் கவனத்தை செலுத்துவது என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். இது குறித்த சிந்தனை மனதிற்குள் வலம் வந்து கொண்டிருக்கும் காரணத்தினால் அவர்களது மகிழ்ச்சி கெடுகிறது.

Image Source: istock

மன அழுத்தம்

புத்திசாலிகள் மீது இந்த சமூகம் அதிகளவில் எதிர்பார்ப்பினை வைக்கிறது. இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கில் அவர்கள் அதை நோக்கி செயல்பட வேண்டியுள்ளது. அப்படி அவர்கள் மீதான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் நிலையில் மன அழுத்தம் ஏற்பட்டு மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.

Image Source: istock

தனிமை

ஒருவன் அதிபுத்திசாலியாக இருக்கும் பட்சத்தில் அவனது சிந்தனைகள் மற்ற சாதாரண மனிதர்களோடு ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அதன் காரணமாக இவர்களோடு பிறர் ஒன்றாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மனசோர்விற்கு ஆளாகிறார்கள்.

Image Source: istock

வழிமுறைகள்

புத்திசாலிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அதிகம் சிந்திக்காமல் இருப்பது நல்லது. அதே சமயம் குடும்பம், நண்பர்களோடு நல் உறவை வளர்த்து கொள்வதும் அவசியம். முடிந்தவரை உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.

Image Source: istock

யோகா, தியானம்

புத்திசாலிகள் தங்களது மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்துக்கொள்ள யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம். ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், தேவைப்படும் உதவிகளை கேட்க தயக்கம் காட்டாதீர்கள்.

Image Source: pexels

வாழ்வின் வளர்ச்சி

புத்திசாலித்தனம் இருந்தால் மட்டும் போதாது, அதனை சரியான விஷயத்தில் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியடைய முடியும். புத்திசாலிகள் தங்களது திறமைகளை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஓர் கருவியாக பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: istock

Thanks For Reading!

Next: உங்கள் Best Friend யார்? கண்டறிய உதவும் எளிய வழிகள்!

[ad_2]