[ad_1] ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த முட்டைகோஸ் ஜூஸ்!

May 30, 2024

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த முட்டைகோஸ் ஜூஸ்!

mukesh M

முட்டைகோஸில் மட்டுமே உள்ள வைட்டமின்-யூ

கீரை வகையினை சேர்ந்த முட்டைகோஸில் வைட்டமின்கள் ஏ,சி,கே, பைட்டோ நியூட்ரியண்ட்கள், உயிர்சத்துக்கள், தாதுக்கள் என பல்வேறு ஊட்டசத்துக்கள் இருக்கையில், பெப்டிக் அல்சரை குணப்படுத்தும் வைட்டமின் 'யூ' இதில் மட்டுமே உள்ளது.

Image Source: pixabay

புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதை தடுக்கும் ஆற்றல் முட்டைகோஸுக்கு உள்ளதாம். குறிப்பாக, குடல், மார்பகம், தொண்டை புற்றுநோய்களுக்கு எதிராக இது செயல்படும்.

Image Source: unsplash

தலைமுடி வளர்ச்சி

முட்டைகோஸை வேகவைத்த நீரில் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் சல்ஃபர் உள்ளது. மேலும் இந்த நீரினை கொண்டு தலைமுடியை அலசி வர, தலைமுடி வளர்ச்சியினை தூண்டும்.

Image Source: istock

பொலிவான சருமம்

முட்டைகோஸ் சாற்றில் பீட்டா கரோட்டின், வைட்டமின்-சி ஆகியன உள்ளன. இது பொலிவான மாசு மருவற்ற சருமத்தினை நமக்கு அளிக்கிறது. அதே போல், ப்ரீ மெச்சியூர் ஏஜிங் ஏற்படாமல் தடுக்கிறது.

Image Source: pixabay

செரிமானத்தினை சீராக்கும்

முட்டைகோஸில் அதிகளவு நார்சத்து நிறைந்துளதால் செரிமான பிரச்சனையினை சீராக்கி, மலசிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதிலுள்ள லாக்டிக் அமிலம் தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

Image Source: istock

சீரான ரத்த அழுத்தம்

முட்டைகோஸில் நிறைந்துள்ள ஃபோலேட், இரும்புச்சத்து ஆகியவை எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. மனநல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதோடு, ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவைகளை சீராக செயல்படுத்தவும் உதவுகிறது.

Image Source: unsplash

பெண்களின் மெனோபாஸ்

பெண்கள் தங்களது மெனோபாஸ் காலங்களில் உடலிலுள்ள பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவற்றை இழக்க நேரிடும் பட்சத்தில், முட்டைகோஸ் அதனை ஈடு செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து தொற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது!

Image Source: istock

எடை குறைப்பு

உடல் எடையினை ஆரோக்கியமான முறையில் குறைக்க, தினமும் வேகவைத்த முட்டைகோஸ் அல்லது சூப்பாகவோ, சாறு எடுத்தோ உட்கொள்ள வேண்டும். உடலிலுள்ள அழற்சி, உட்காயங்கள் ஆகியவற்றையும் இது குணப்படுத்த கூடியதாகும்.

Image Source: pexels-com

தைராய்டு கோளாறுகள்

அதிகளவில் முட்டைகோஸ் சாப்பிட்டால் அதிலுள்ள கோயிட்ரோஜன்கள் தைராயுடுக்கு போதுமான அயோடினை செல்லவிடாமல் தடுத்து, தைராய்டு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: 'வைட்டமின் பி12' குறைபாட்டால் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

[ad_2]