Aug 7, 2024
பழங்காலம் முதல் ஆயுர்வேத மருத்துவத்தில் சங்கு பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தாவரமானது தோட்டங்களில், சாலையோரங்களில் வளர்ந்து கிடக்கும். இதன் பூக்கள் மட்டுமின்றி வேர்கள், விதைகள், இலைகள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது.
Image Source: istock
சங்கு பூ கொண்டு தயாரிக்கப்படும் டீயை நாம் குடிப்பதால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்கு சுத்தப்படுத்திய சங்கு பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டினால் சங்கு பூ டீ தயார். சுவைக்காக இதில் இஞ்சி, பனங்கற்கண்டு, பனை வெல்லம் போன்ற பொருட்களையும் சேர்த்து பருகலாம்.
Image Source: istock
சங்கு பூ டீயில் நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் உறைந்த கொழுப்பினை கரைக்கும் திறன் நிரம்பியுள்ளது. சூடான சங்கு பூ டீயை தினமும் 2 வேளை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் 2 கிலோ எடை வரை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சங்கு பூ டீயினை தினமும் 2 வேளை டீ, காபிக்கு பதிலாக குடித்து வரலாம். இதன் மூலம் அவர்களது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைவதோடு, கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Image Source: istock
சங்கு பூ டீயில் அந்தோசயனின் உள்ளது, இது தலையில் ரத்த ஓட்டத்தை சீர் செய்து உச்சந்தலையில் நன்றாக முடி வளர உதவுகிறது. கூந்தல் நன்கு பளபளப்பாக இருக்கவும், முடி உதிர்தல் பிரச்சனை குறையவும் தினமும் இந்த டீயை குடிக்கலாம்.
Image Source: istock
இந்த டீயில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் நமக்கு ஓர் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. மன அழுத்தத்தை குறைப்பதோடு, மனநிலை மேம்பட்டு ரிலாக்ஸாக இருக்கவும் இது உதவும். மேலும் இந்த டீயை இரவில் தூங்குவதற்கு முன் குடித்தால் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
Image Source: istock
ப்ளூ டீ என்று கூறப்படும் இந்த சங்கு டீ சளி, இருமல், சுவாச பிரச்சனைகள் உள்ளிட்டவைக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது. இது ஒரு பாராசிட்டமால் போல செயல்பட்டு காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றை குறைக்கிறது. இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலின் வீக்கத்தை குறைக்க கூடியது.
Image Source: istock
இந்த டீயை கோடை காலத்தில் எடுத்து கொள்வது உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வாரத்தில் ஒரு முறை அல்லது இருமுறை இந்த டீயை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு செரிமானம் மேம்படும்.
Image Source: istock
சங்கு பூ டீயில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் நமது சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. சருமத்திற்கு முதுமை தோற்றம் மற்றும் சுருக்கங்களை கொடுக்கும் செல்களின் வளர்ச்சியை இது அழிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொலாஜென் உற்பத்தியையும் இந்த டீ தூண்டுகிறது.
Image Source: pexels
Thanks For Reading!