May 18, 2024
IPL கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியை சந்தித்த கேப்டன்கள் யார்? எத்தனை போட்டிகளில் இவர்கள் தோல்வியை சந்தித்தனர்? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெயிலி தலைமியலான அணி 2015ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் தாங்கள் விளையாடிய 14 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
Image Source: instagram
புனே வாரியஸ் இந்தியா அணி 2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், சவுரவ் கங்கூலி தலைமையில் 15 போட்டிகளில் விளையாடியது. ஆனால் இவற்றில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மீதமுள்ள 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
Image Source: instagram
2014ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டில்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் கெவின் பீட்டர்சன். இதில் இந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
Image Source: instagram
2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தார் ராகுல் டிராவிட். இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய இந்த அணி, 10 வோட்டிகளில் தோல்வி அடைந்தது.
Image Source: instagram
2013 ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டில்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த மகிலா ஜெயவர்த்தனே, 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்தார். இதில் தர வரிசை புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை இந்த அணி பெற்றது.
Image Source: instagram
2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தாங்கள் விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
Image Source: iStock
2024ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டி தான் ஹார்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் முதல் தொடர். இவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி, 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
Image Source: iStock
2013 ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோல்கத்தா நைட் ரைடஸ் அணியின் கேப்டனாக இருந்தார் கவுதம் காம்பீர். இதில் இவர் தலைமையிலான அணி 16 போட்டிகளில் விளையாடி, 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
Image Source: iStock
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பிரின்டன் மெக்கல்லம் 2009ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அந்த தொடரில் இவர்கள் விளையாடிய 13 போட்டிகளில் 9 போட்டிகளில் இந்த அணி தோல்வி அடைந்தது.
Image Source: iStock
Thanks For Reading!
Find out More