[ad_1] ஒமேகா - 3 குறைபாடு உண்டாவது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

May 20, 2024

ஒமேகா - 3 குறைபாடு உண்டாவது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

mukesh M

ஒமேகா - 3 குறைபாடு!

உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்நிலையில், இந்த ஊட்டம் உடலில் குறைந்தால் என்னவாகும்? இந்த குறைபாட்டை கண்டறிவது எப்படி? என இங்கு காணலாம்!

Image Source: istock

காரணம் என்ன?

உடலில் ஒமேகா - 3 சத்து குறைவாக இருப்பதன் முக்கிய காரணம், கடல் உணவுகளை தவிர்ப்பது ஆகும். இதேப்போன்று ஒமேகா -3 நிறைந்த உணவு பொருட்களை புறக்கணிப்பதும் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணமாக அமைகிறது.

Image Source: istock

எப்படி கண்டறிவது?

ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தில் குறைபாடு உண்டாகும் போது நம் சருமம் வறண்ட நிலையில் காட்சியளிக்கும். ஆதாவது, இந்த ஒமேகா -3 தட்டுப்பாடு ஆனது, சருமத்தின் ஈரப்பதத்தை குறைத்து, சரும வறட்சி நிலைக்கு வழிவகுக்கிறது!

Image Source: istock

மூட்டு வலி!

மூட்டு சவ்வுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் ஆனது பல வகையில் உதவி செய்கிறது. அந்த வகையில் இந்த கொழுப்பு அமிலத்தில் அளவு குறையும் போது, மூட்டுகளில் விறைப்பு தன்மை அதிகரிப்பதோடு, அழற்சி மட்டும் சேதங்கள் உண்டாகி மூட்டு வலி ஏற்பட கூடும்!

Image Source: istock

கவன சிதறல் ஏற்படும்!

நரம்பு மண்டல ஆரோக்கியம் காத்து, ஆரோக்கியமான நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உறுதி செய்ய ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.

Image Source: istock

சோர்வு!

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆனது உணவை ஆற்றாலாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இந்த ஊட்டத்தின் குறைபாடு ஆனது, ஆற்றலை மட்டுப்படுத்தி உடல் சோர்வு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

மன அழுத்தம்!

ஒமேகா -3 கொழுப்பு அமிலம் ஆனது நம் மன நிலை மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் இந்த கொழுப்பு அமிலத்தின் குறைபாடு ஆனது, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.

Image Source: pexels-com

கிருமி தொற்றுகள்!

ஆய்வுகளின் படி ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் குறைபாடு ஆனது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிக்கு மறைமுகமாக வழிவகுக்கிறது. அந்த வகையில் இது, நோய் எதிர்பு சக்தி குறைபாட்டால் உண்டாகும் சளி, காய்ச்சல் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது!

Image Source: istock

எச்சரிக்கை!

ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தின் தட்டுப்பாடு ஆனது பல்வேறு ஆரோக்கிய சிக்கலுக்கு வழிவகுக்கும் நிலையில், இந்த குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, ஆரோக்கியு உணவு வழக்கத்தை கடைப்பிடித்து நலம் பெறுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: கோடை காலத்தில் வயிற்றை குளிர்ச்சியாக்கும் உணவுகள்

[ad_2]