Apr 30, 2024
By: Anojசமூக ஊடகத்தில் பேசிப்பழகிய நபரை நேரில் சந்திக்க திட்டமிடுகையில், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி இங்கு விரிவாக காணலாம்
Image Source: istock
ஆன்லைனில் பேசிய நபர் என்றாலும், உணவகம், பூங்கா போன்ற பொது இடங்களில் சந்தித்து பேசுவது தான் பாதுகாப்பானது. அதேபோல், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்கிற தகவலை நண்பருக்கு தெரியப்படுத்துவது நல்லது
Image Source: pexels-com
சமூக ஊடகங்கள் பிறரை ஏமாற்றுவதற்கான தளமாக தற்போது மாறிவருகிறது. நீங்கள் சந்திக்கும் நபர் அப்படிப்பட்டவர் இல்லை என்றாலும், கவனமாக இருக்க வேண்டும். உங்க உள்ளுணர்வை நம்ப செய்யுங்கள். ஏதேனும் தவறாக தோன்றினால், அங்கிருந்து புறப்படுவது நல்லது
Image Source: pexels-com
வீட்டு முகவரி, மொபைல் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்களை முதல் சந்திப்பிலே பகிர்வதை தவிர்ப்பது நல்லது. அந்நபரை பற்றி நன்கு அறிந்தப்பிறகு, இத்தகைய தகவல்களை பகிர செய்யலாம்
Image Source: pexels-com
நீங்கள் சந்திக்க செல்லும் நபர், ஆன்லைனில் பார்த்தது போல் இல்லாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி திறந்த மனநிலையுடன் சந்திக்க செல்லுங்கள்
Image Source: pexels-com
சமூக ஊடகத்தில் நீண்ட நேரம் பேசியிருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்து பேசுவது வித்தியாசமாக தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உரையாடும் விதத்தை பொறுத்து உங்க செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்
Image Source: pexels-com
நீங்கள் சந்திக்கும் நபரை பற்றி முழுமையாக அறிய, போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவசர அவசரமாக கேள்விகள் அடுக்குவதை தவிர்ப்பது நல்லது. உங்க இருவருக்கும் இடையிலான உறவு இயற்கையான முறையில் வளர வேண்டும்
Image Source: pexels-com
நீங்கள் சந்திக்க செல்லும் நபரை இம்பரஸ் செய்ய விரும்பினால், என்னென்ன தலைப்புகளை பேசலாம் என்பதை முடிவு செய்து செல்லுங்கள். அவை அந்நபரின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும்
Image Source: pexels-com
உங்களுக்கும், நீங்கள் சந்திக்கும் நபருக்கும் தெளிவான எல்லைகளை அமைத்து கொள்வது அவசியம். இச்சந்திப்பின் எதிர்பார்ப்புகள் என்ன? எந்த விஷயத்தில் வசதியாக உணர்வீர்கள் என்கிற தெளிவான சிந்தனை இருவருக்கும் இருப்பதை உறுதி செய்யவும்
Image Source: pexels-com
Thanks For Reading!