May 8, 2024
By: mukesh Mஎதிர்மறை ஆற்றல் எனப்படுவது கண்ணுக்கு புலப்படாத மோசமான அதிர்வலைகள் ஆகும். மன நலனை பாதிக்கும் இந்த எதிர்மறை ஆற்றலை கண்டறிவது எப்படி? விரட்டுவது எப்படி? என இங்கு காணலாம்.
Image Source: istock
நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை கண்டறிய பல வழிகள் உள்ளது. இருப்பினும் தண்ணீர் பயன்படுத்தி கண்டறியும் முறை ஆனது, நல்ல பலன் அளிக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
இந்த தண்ணீர் பரிசோதனை செய்ய நமக்கு தேவையானது 16 அவுன்ஸ் தண்ணீர், 2 ஸ்பூன் வெள்ளை வினிகர், உப்பு 1 ஸ்பூன் மற்றும் ஒரு கண்ணாடி கிளாஸ்!
Image Source: istock
அமைதியான இடம் ஒன்றை தேர்வு செய்து அமருங்கள். பின் இந்த கண்ணாடி கிளாஸில் தண்ணீர், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலந்து உங்கள் முன் வைத்து அமைதியாக அமர வேண்டும்.
Image Source: istock
கிளாஸில் தண்ணீர் கலந்து வைத்த பின் ஆழ்ந்த சுவாச பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி, உங்களை சுற்றியுள்ள சப்தங்களை உணர துவங்குங்கள்.
Image Source: istock
ஆழ்ந்த சுவாச பயிற்சிக்கு பின்னர் இந்த கண்ணாடி கிளாஸினை இருக்கும் இடத்தில் குறைந்தது ஒரு நாளுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் நேரத்தை நீங்கள் அதிகம் செலவிடும் அறையில் இதை செய்யுங்கள்.
Image Source: istock
ஒரு நாள் கழித்து தற்போது இந்த கண்ணாடி கிளாஸை காணும்போது, நீருக்கு மேல் வெள்ளை படலம் தேங்கி இருப்பதை கண்டால் உங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல் இருந்ததாகவும், இந்த எதிர்மறை ஆற்றல்கள், நீரில் அடங்கியதாகவும் அர்த்தம்.
Image Source: istock
எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவும் இந்த செயல்முறையின் போது அறையில் ஆழமா காற்றோட்டத்தை உறுதி செய்ய, அறையின் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது அவசியம்.
Image Source: pexels-com
இதேப்போன்று செயல்முறையின் போது நேர்மறை ஆற்றல்களின் வருகையை உறுதி செய்ய அகர்பத்தி, தூபங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
Image Source: istock
Thanks For Reading!