May 4, 2024
By: Anojஒருவரை சிரிக்க வைப்பது, அந்நபரின் நாளை சிறப்பானதாக மாற்றக்கூடிய சிறந்த வழியாகும். இச்செயலின் போது அவர்களை விட நீங்கள் அதிக மகிழ்ச்சியை உணர செய்வீர்கள். இந்தப் பதிவில், ஒருவரின் முகத்தில் புன்னகை கொண்டு வரும் வழிகளை பார்க்கலாம்
Image Source: pexels-com
இதை செய்ய சில நொடிகள் மட்டுமே ஆகக்கூடும். ஆனால், உங்கள் பாராட்டு அந்நபருக்கு நீண்ட நேர மகிழ்ச்சி உணர்வை தரக்கூடும். ஆடை, ஹேர் ஸ்டைல் என எதுவாக இருந்தாலும், அதனை சுட்டிக்காட்டி பாராட்ட செய்யுங்கள்
Image Source: pexels-com
சிறிய விஷயங்களுக்கும் நன்றி சொல்லும் பழக்கத்தை பின்பற்றுங்கள். உதாரணமாக, கடைகளில் நாம் வாங்கிய பொருட்களை பையில் அடுக்கிதரும் நபருக்கு, நீங்கள் சொல்லும் நன்றி என்கிற ஒற்றை வார்த்தையும் மகிழ்ச்சியை தரக்கூடும்.
Image Source: pexels-com
முகத்தை எப்போதும் புன்னகையுடன் வைத்திருந்தால், உங்களை பார்ப்பவர்களும் மிகவும் பாசிட்டிவாக உணர செய்வார்கள். நீங்கள் பேசாத நபராக இருந்தாலும், அவர்களை பார்த்து சிரிப்பது மகிழ்ச்சி உணர்வை தரக்கூடும்
Image Source: pexels-com
உங்களுடன் பணியாற்றும் நபர்களுக்கு ஏதேனும் உணவுகளை கொண்டு சென்று பரிமாற செய்யலாம். அதேபோல், நீங்கள் தினமும் கடைகளில் பார்க்கும் நபருக்கு கூட சர்ப்பரைஸாக சாக்லேட் போன்றவற்றை அளிக்க செய்யலாம்
Image Source: pexels-com
ஒருவரை வார்த்தைகளில் பாராட்டுவதை காட்டிலும் பேப்பரில் எழுதி அளிப்பது கூடுதல் சந்தோஷத்தை அளிக்கக்கூடும். அவர்கள் அதனை மற்றவர்களுக்கு காட்டியும் சந்தோஷப்படுவார்கள்.
Image Source: pexels-com
ஒருவர் லிப்ட் நோக்கி வரும் பட்சத்தில், அவருக்காக லிப்ட் கதவை திறந்து வைத்திருப்பது, அந்நபருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும். அதே போல், கடைகளில் உங்களுக்கு பின்னால் அதிக பொருட்களை சுமந்து வரும் நபருக்காக கதவை திறந்தும் உதவி செய்யலாம்
Image Source: pexels-com
ஒருவர் கஷ்டப்படுவதை நேரில் பார்க்கும் போது, உங்களால் முடிந்த சிறிய உதவிகளை செய்வது, அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கக்கூடும்.
Image Source: pexels-com
ஒருவரை சொல்வதை காது கொடுத்து கேட்பது கூட, அவர்களது மனதில் மகிழ்ச்சி உணர்வை வரவழைக்கும். எவ்வித கவனச்சிதறலும் இன்றி அவர் சொல்லும் விஷயத்தில் முழு கவனத்தை செலுத்த செய்யுங்கள்
Image Source: pexels-com
Thanks For Reading!