Jul 28, 2024
By: Nivethaசெல்போன் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சிறிது நேரம் கையில் போன் இல்லையென்றால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுகிறது. அப்படி இருக்கையில் போனை பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
Image Source: istock
பலரும் தங்களது போனை பராமரிக்க தெரியாமல் பல தவறுகளை செய்கிறார்கள். அதில் முக்கியமான தவறு என்றால் போனை சார்ஜ் செய்வது தான். நமது போனை ஒருநாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்த விவரங்களை தான் இப்பதிவில் காணவுள்ளோம்.
Image Source: pixabay
போனை சார்ஜ் செய்யும் போது ஒருசில குறிப்புகளை பின்பற்றினால் போன் பேட்டரி பலநாட்கள் பழுதடையாமல் செயல்படும், செல்போனும் அதிக நேரம் செயல்படும் என்று கூறுகிறார்கள். இந்த குறிப்புகள் மூலம் போனும் நல்ல நிலையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Image Source: istock
போன் பேட்டரி முழுவதும் காலியாகும் வரை போனை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் போன் பேட்டரியின் ஆயுட்காலம் குறைய துவங்கும். அதே போல் போன் பேட்டரி 100 சதவீதம் ஆகும் வரையிலும் சார்ஜரில் போட்டு வைக்க கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் பேட்டரி வெடித்து விடக்கூடும்.
Image Source: istock
நமது போன்களில் நமக்கு தெரியாமலேயே சில செட்டிங்க்ஸ் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். அதன் காரணமாகவே உங்களது போனின் சார்ஜ் சீக்கிரம் குறைய துவங்கும். அதனை ஆராய்ந்து தேவையற்ற செட்டிங்க்ஸை ஆப் செய்து பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய அவசியம் இருக்காது.
Image Source: istock
அடிக்கடி போனை சார்ஜரில் போட்டால் பேட்டரி கெட்டு விடும். அதனால் முடிந்தளவு போனை பேட்டரி மோடில் போட்டு பயன்படுத்துங்கள். இது பேக்ரவுண்டில் நடந்துக்கொண்டிருக்கும் ஆப் அப்டேட்களை நிறுத்தி அடிப்படை செயல்பாடுகளை மட்டும் செயல்பட வைக்கிறது. இதனால் சார்ஜ் குறையாமல் இருக்கும்.
Image Source: pexels
உங்கள் போனில் இருக்கும் டாஸ்க் ஸ்விட்ச்சை ஆன் செய்து விடலாம், இதன் மூலம் செயல்பாட்டில் இருக்கும் ஆப்கள் போர்ஸ் க்ளோஸ் செய்யப்படும். மேலும் இந்த ஸ்விட்சை பயன்படுத்துவதினால் உங்கள் போனின் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்க உதவும்.
Image Source: istock
உங்களது மொபைல் போன் நல்ல கண்டிஷனில் இருந்தால் அதன் பேட்டரி உங்களுக்கு 2-3 நாட்கள் வரை நீடிக்கும். அதுவே நாள்பட்ட போன் அல்லது நெட், கேம்ஸ் போன்றவை அதிகம் பயன்படுத்தும் நபர்கள் என்றால் ஒரு நாளைக்கு ஒருமுறை, அதிகப்பட்சம் இரண்டு முறை மட்டுமே சார்ஜ் போடா வேண்டும்.
Image Source: Samayam Tamil
சார்ஜ் செய்யும் முறைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் மிக முக்கிய குறிப்பு ஒன்று உள்ளது. எக்காரணம் கொண்டும், போனை சார்ஜரில் போட்டவாறு பயன்படுத்த கூடாது. அதே போல் சார்ஜ் ஏறியதும் சார்ஜர் இணைக்கப்பட்ட ஸ்விட்சை உடனடியாக ஆப் செய்து விடவேண்டும். இல்லையேல் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
Image Source: istock
Thanks For Reading!