Aug 8, 2024
By: Anojசில நேரங்களில், நீங்கள் மெசேஜ் அனுப்பிய பெண்ணிடம் இருந்து ரிப்ளை வராமல் இருக்க வாய்ப்புள்ளது. அதை பற்றியே சிந்தித்து கவலையடைவதற்கு பதிலாக, அச்சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை இங்கு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Image Source: pexels-com
ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சில நேரங்களில், அவர்களால் உடனடியாக ரிப்ளை செய்ய முடியாமல் போகலாம். நீங்களாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு சிறிது நேரம் அளிப்பது அவசியமாகும்
Image Source: istock
முதலில் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை பற்றி தொடர்ச்சியாக சிந்திப்பது மன அழுத்தத்தை அதிகரித்து தேவையற்ற கவலைகளுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
Image Source: pexels-com
மனதை திசைத்திருப்பும் செயல்களில் ஈடுபட செய்யுங்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, லாங் ட்ரைவ் செல்வது அல்லது படம் பார்ப்பது போன்ற செயலில் ஈடுபடுங்கள். பிற விஷயங்களில் உங்களை பிஸியாக வைத்திருப்பது, மொபைலை அடிக்கடி செக் செய்வதை குறைக்கக்கூடும்
Image Source: pexels-com
உங்க மெசேஜ்க்கு ரிப்ளை வர தாமதமாகும் போது, மீண்டும் மெசேஜ் செய்திடும் எண்ணத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இச்செயலை எந்தவொரு பெண்களும் விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பும் நேரத்தில் மெசேஜ் செய்வதற்கான ஸ்பேஸ் அளியுங்கள்
Image Source: pexels-com
ஒவ்வொரு நபருக்கும் சாட்டிங் ஸ்டைல் மாறக்கூடும். சிலர் அவசரத்தில் பதிலளிக்காமல் பொறுமையாக பதிலளிப்பார்கள். ஒரு சிலர் மெசேஜ் காட்டிலும் போன் கால் அல்லது நேரில் தான் பேச விரும்புவார்கள். எனவே, நீங்கள் பேசும் பெண்ணின் சாட்டிங் ஸ்டைலை அறிவிது அவசியமாகும்
Image Source: istock
உங்க இருவருக்கும் இடையிலான உறவு பற்றி யோசியுங்கள். ஏதேனும் சண்டை அல்லது மனதை காயப்படுத்தும் விஷயங்களை பேசினீர்களா என்பதை யோசியுங்கள். எப்போதும் உடனடியாக ரிப்ளை செய்யும் பெண், திடீரென தாமதம் செய்வதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கக்கூடும்
Image Source: pexels-com
நீங்கள் மெசேஜ் அனுப்பி நீண்ட நேரம் ஆன பிறகு, அவரது யோசனை தொடர்ச்சியாக இருந்தால், மனதை காயப்படுத்தாத வகையில் மெசேஜை அனுப்ப செய்யலாம். சில நேரங்களில் பிஸியில் மெசேஜ் ரிப்ளை செய்திட மறந்திருப்பார்கள். அச்சமயத்தில் ஃபாலோ அப் மெசேஜ் ஞாபகப்படுத்த உதவக்கூடும்
Image Source: pexels-com
நீங்கள் 2வது அனுப்பிய மெசேஜ்க்கும் ரிப்ளை வரவில்லை எனில், உங்களுடன் பேச விருப்பம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நேரத்தை வீணாக்காமல் சுய கவனிப்பில் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்
Image Source: pexels-com
Thanks For Reading!