[ad_1] ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!

ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!

Jun 8, 2024

By: Anoj

நீண்ட நேரம் ஒரே இடத்தில்.,

உடல் செயல்பாடுகள் இன்றி ஒரே இடத்தில் இருப்பது, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும். இதன் காரணமாக, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வாழ்க்கை முறையால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: pexels-com

மலச்சிக்கல்

உடல் செயல்பாடுகள் இல்லாமல் ஒரே இடத்தில் இருக்கும் பெண்களுக்கு, வளர்சிதை மாற்றக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல் அபாயம் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது

Image Source: istock

வெஜைனிடிஸ்

இது பிறப்புறுப்பில் அரிப்பு, வலியை உண்டாக்கும் தொற்று பாதிப்பாகும். இதற்கு ஒரே இடத்தில் நேரத்தை செலவிடுவது முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்கையில் பிறப்புறுப்பில் காற்றோட்டம் குறைந்து ஈரப்பதம் அதிகரிக்கும். இது பாக்டீரியா மற்றும் வீக்கத்தை அதிகரிக்க செய்யலாம்

Image Source: istock

டிஸ்மெனோரியா

மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி அனுபவிப்பதை, டிஸ்மெனோரியா என அழைக்கிறார்கள். இது பெரும்பாலும் ஒரே இடத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Image Source: istock

புற்றுநோய்

உடலை அசைக்காமல் ஒரே இடத்தில் நேரத்தை செலவிடும் பழக்கம், புற்றுநோயை உண்டாக்குவதற்கான வாய்ப்புள்ளது. அவை வீக்கத்தை தூண்டி, புற்றுநோய் செல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம். உடல் செயல்பாடுகள் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக மலேசியா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

Image Source: pexels-com

நாள்பட்ட மூட்டு வலி

50 வயதுக்கு மேற்பட்ட தென் கொரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 10 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருக்கும் பெண்கள் நாள்பட்ட மூட்டு வலியை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளது

Image Source: istock

மண்ணீரல் வீக்கம்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மற்றும் உடல் செயல்பாடு இல்லாதது, ரத்த ஓட்டத்தை பாதித்து மண்ணீரலில் வீக்கத்தை உண்டாக்கி அதன் செயல்பாட்டை பாதிக்கலாம். தசைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் மண்ணீரல் முக்கிய பங்கு வகிக்கிறது

Image Source: istock

இடைவெளி முக்கியம்

ஒரே இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பிரேக் டைமில் ஸ்ட்ரெச்சிங் அல்லது மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். அதேபோல் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்குங்கள். குறைந்தது 5000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்

Image Source: pexels-com

ஆரோக்கியமான உணவு முறை

இந்த வாழ்க்கை முறையால், உடலில் ஏற்படும் பாதகமாக விளைவுகளை எதிர்கொள்ள, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியத்தை சேர்க்க வேண்டும். அதேநேரம், உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்க வேண்டும்

Image Source: istock

Thanks For Reading!

Next: வீட்டில் இந்த செடிகளை வைத்தால் துரதிர்ஷ்டம் வரும்ன்னு தெரியுமா?

[ad_2]