[ad_1] ஒரே படத்தில் '100 மில்லியன் டாலர்' சம்பாதித்த நடிகர்கள் யார் தெரியுமா?

ஒரே படத்தில் '100 மில்லியன் டாலர்' சம்பாதித்த நடிகர்கள் யார் தெரியுமா?

Anoj, Samayam Tamil

Jul 18, 2024

கோடிகளில் புரளும் நடிகர்கள்

கோடிகளில் புரளும் நடிகர்கள்

ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு ஹீரோவுக்கு சம்பளம் தருவது மட்டுமின்றி பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்தால் அதிலிருந்தும் சிறிது பங்கு அளிப்பதாக ஒப்பந்தம் செய்வார்கள். அந்த வகையில், ஒரே படத்தில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை பெற்ற நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com

டாம் குரூஸ்

அமெரிக்க நடிகரும், தயாரிப்பாளருமான டாம் குரூஸ், திரைப்படங்களில் டூப் இல்லாமல் சாகச காட்சிகளில் நடிக்கக்கூடியவர். இவர் 2022ல் வெளியான 'டாப் கன் மேவரிக்' படம் மூலம் 100 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார்

Image Source: instagram-com/tomcruise

$12.5 மில்லியன் சம்பளம்

இந்த படத்தில் பைட்டர் ஜெட் விமானியாக நடிப்பதற்கு டாம் குரூஸ்-க்கு 12.5 மில்லியன் டாலர் தான் சம்பளமாக அளிக்கப்பட்டது. ஆனால், படம் பாக்ஸ் ஆபீஸில் 1.5 பில்லியன் டாலர் வசூலித்ததை தொடர்ந்து, அவருக்கு மொத்தமாக 100 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது

Image Source: instagram-com

சாம் வோர்திங்டன்

அவதார் பட நாயகன் சாம் வோர்திங்டன், அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் மூலம் 100 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு 10 மில்லியன் டாலர் சம்பளமும், லாபத்தில் 5 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் போட்டுள்ளனர்

Image Source: instagram-com

லாபத்தில் 5 சதவீதம்

அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் பாக்ஸ் ஆபீஸில் 2.3 பில்லியன் டாலர் வசூலித்ததை தொடர்ந்து, சாம் வோர்திங்டனின் பங்கு மட்டுமே 100 மில்லியன் டாலர் வந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Image Source: instagram-com

வில் ஸ்மித்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், Men In Black 3 படம் மூலம் 100 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார். படத்தின் லாபத்தில் 10 சதவீதம் தருவதாக கூறிய நிலையில், 654 மில்லியன் டாலர் குவித்து இமாலய சாதனை புரிந்தது.

Image Source: instagram-com

ராபர்ட் டவுனி ஜூனியர்

மார்வெல் சீரிஸ் ராபர்ட் டவுனி ஜூனியரை, ஹாலிவுட்டில் உச்சத்திற்கு அழைத்து சென்றது. முதல் அயன் மேன் திரைப்படத்திற்கு 2 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளம் பெற்ற நிலையில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கு 75 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்

Image Source: instagram-com

130 மில்லியன் டாலர்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் லாபத்தில் 8 சதவீதம் தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன் மூலம் கூடுதலாக 55 மில்லியன் டாலர் கிடைத்ததை தொடர்ந்து, ராபர்ட் டவுனி மொத்தமாக 130 மில்லியன் டாலருடன் வீட்டிற்கு சென்றுள்ளார்

Image Source: instagram-com

புரூஸ் வில்லிஸ்

1999ம் ஆண்டிலே 100 மில்லியன் டாலர் சம்பாதித்தவர் நடிகர் புரூஸ் வில்லிஸ். இவருக்கு 'The Sixth Sense' படத்தில் நடிக்க 14 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கியதோடு லாபத்தில் 17.5 சதவீதமும் அளிக்கப்பட்டது. அப்படம் பாக்ஸ் ஆபீஸில் 672 மில்லியன் டாலர் வசூலித்தது

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: தேசிய திரைப்பட விருதுகளை வென்று குவித்த இந்திய நடிகைகள்!

[ad_2]