[ad_1] ஒலிம்பிக்கில் இருந்து நிறுத்தப்பட்ட விசித்திர விளையாட்டுகள்!

ஒலிம்பிக்கில் இருந்து நிறுத்தப்பட்ட விசித்திர விளையாட்டுகள்!

mukesh M, Samayam Tamil

Jul 12, 2024

விசித்திர விளையாட்டுகள்!

விசித்திர விளையாட்டுகள்!

ஒலிம்பிக்கின் பல்வேறு தொடர்களில் இடம்பெற்று, பின் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்ட (அ) இடை நிறுத்தம் செய்யப்பட்ட விசித்திர விளையாட்டுகள் ஒரு சிலவற்றை குறித்து இங்கு காணலாம்!

Image Source: twitter-com

Plunge for Distance (Diving)!

1904-ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இடம்பெற்ற நீர் சாகச விளையாட்டு. பார்வையாளர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த விளையாட்டு ஒரேஒரு தொடரில் மட்டுமே நடத்தப்பட்டது. இதே காரணத்திற்காக Plain High Diving போட்டியானது 1912, 1920, 1924 ஆகிய மூன்று தொடர்களுடன் கைவிடப்பட்டது!

Image Source: twitter-com

உள் நீச்சல்!

ஒலிம்பிக்கில் நீச்சலுக்கு தனி அங்கீகாரம் அளிக்கப்படும் அதேநேரம் இந்த மதிப்பு உள் நீச்சலுக்கு கிடைக்காமல் போனது. இதன் விளைவாக இந்த போட்டி 1900-ஆம் ஒலிம்பிக் தொடருடன் நிறுத்தப்பட்டது. நீருக்குள் நடக்கும் சாகசத்தை பார்வையாளர்களால் ரசிக்க முடியாத காரணத்தால் இது நிறுத்தப்பட்டது!

Image Source: pexels-com

Croquet!

கிட்டத்தட்ட Golf விளையாட்டு போன்றே இருக்கும் இந்த Croquet விளையாட்டு ஆனது, 1900-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மட்டுமே இடம்பெற்றது. இதன் போது இந்த விளையாட்டை காண ஒரே ஒரு நபர் மட்டுமே ஆடுகளத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது!

Image Source: twitter-com

Tug of War!

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவின் போது கட்டாயம் இடம்பெறும் கயிறு இழுக்கும் போட்டி தான் இந்த Tug of War. 1900 - 1920 இடைப்பட்ட காலத்தில் ஒலிம்பிக்கில் இடம்பெற்ற இந்த போட்டி, பிற்காலத்தில் செலவினம் கருதி கைவிடப்பட்டது!

Image Source: twitter-com

Standing High Jump!

நின்ற இடத்தில் இருந்து உயரம் தாண்டுதல் போட்டி, தற்போது உள்ள உயரம் தாண்டுதல் போட்டியின் ஆதிக்கத்தால் 1900, 1904, 1906, 1908 மற்றும் 1912 ஆகிய தொடர்களுடன் நிறுத்தப்பட்டது!

Image Source: twitter-com

Standing Long Jump & Triple Jump!

இதேப்போன்று நின்ற இடத்தில் இருந்து நீளம் தாண்டுதல் போட்டியும் (1900, 1904, 1906, 1908 மற்றும் 1912), நின்ற இடத்தில் இருந்து மூன்று தாண்டுதல் போட்டியும் (1900 மற்றும் 1904) பார்வையாளர் வரவேற்பு குறைய கைவிடப்பட்டது!

Image Source: twitter-com

One Hand Weightlifting!

ஒற்றை கையில் பளூதூக்கும் போட்டி 1896, 1904 மற்றும் 1906 ஆகிய மூன்று தொடர்களில் மட்டுமே இடம்பெற்றது. போட்டியாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாக இந்த போட்டி பின்நாட்களில் கைவிடப்பட்டது!

Image Source: twitter-com

Rope Climbing!

கயிறு இழுத்தல் போட்டி போன்றே தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மற்றும் ஒரு விளையாட்டு வடம் ஏறுதல் போட்டி. ஒலிம்பிக்கின் 1896, 1904, 1906, 1924 மற்றும் 1932-ஆம் ஆண்டு தொடர்களில் இடம்பெற்ற இது பின் நாட்களில் பார்வையாளர்கள் இன்றி கைவிடப்பட்டது!

Image Source: twitter-com

Thanks For Reading!

Next: ஒலிம்பிக்கில் அதிக 'தங்கப் பதக்கம்' வாங்கிய நாடு எது தெரியுமா?

[ad_2]