Jul 27, 2024
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவாகும். ஆனால், சில எதிர்பாராத சூழலில் ஒலிம்பிக் பதக்கத்தை இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தவறவிட்டுள்ளனர். அவர்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: instagram-com/anjubgeorge
இந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை, 1992, 1996, 2000 மற்றும் 2004 ஆகிய 4 ஒலிம்பிக்கில் பங்கேற்ற போதும், பதக்கம் வெல்ல முடியவில்லை. ஆனால், ஆசிய விளையாட்டு, சாம்பியன்ஸ் டிராபி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்
Image Source: x-com/dhanrajpillay1
மின்னல் வேகத்தில் ஒடும் திறன் கொண்ட மில்கா சிங், 1960 ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். ஆனால், 2 முறை காமன்வெல்த் மற்றம் 4 முறை ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
Image Source: instagram-com
இந்தியாவின் தங்க மங்கையாக கருதப்பட்ட பிடி உஷா, ஆசிய விளையாட்டில் 4 தங்கமும், 7 வெள்ள பதக்கமும் வென்றுள்ளார். ஆனால், 2 முறை ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றப்போதும், ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை
Image Source: instagram-com
தடகளப் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ், ஒலிம்பிக் கனவை நூலிழையில் தவறவிட்டார். அவர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 5வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
Image Source: instagram-com
முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதி, 1996, 2000 மற்றும் 2004 ஆகிய 3 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றார். ஆனால், ஒரு முறை கூட பதக்கம் வெல்லவில்லை
Image Source: instagram-com
முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, 4 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றப்போதும் பதக்கம் வெல்ல முடியவில்லை. 2016 ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்
Image Source: instagram-com
இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், 2 உலக சாம்பியன்ஷிப், 2 ஆசிய விளையாட்டு மற்றும் 3 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். ஆனால், 2016 மற்றும் 2021 ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்டார். தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றுள்ளார்
Image Source: instagram-com
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது கிடையாது. இவர் 2008, 2012 மற்றும் 2016 என 3 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார். இவருக்கு 2015ல் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டது
Image Source: instagram-com
Thanks For Reading!