Aug 2, 2024
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள்(3 நிலை) பிரிவில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/swapnil_kusale
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் கம்பல்வாடி கிராமத்தில் 1995 ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்தார் ஸ்வப்னில் குசாலே. இவரது தந்தை பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்
Image Source: instagram-com/swapnil_kusale
பள்ளியில் ஸ்வப்னில் திறமையை கண்டு வியந்த அவரது தந்தை, 2009ல் விளையாட்டுக்கான அரசு திட்டத்தில் சேர வலியுறுத்தியுள்ளார். ஓராண்டு கடின பயிற்சிக்கு பிறகு, ஒரு விளையாட்டை தேர்வு செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்தில் துப்பாக்கி சுடுதலை தேர்ந்தெடுத்துள்ளார்
Image Source: instagram-com/swapnil_kusale
ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ஸ்வப்னில்-க்கு ஒரு கட்டத்தில் துப்பாக்கிக்கு புல்லட் வாங்க கூட காசு இல்லாமல் இருந்துள்ளது. அப்போது ஒரு புல்லட் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், மகனுக்காக வங்கியில் லோன் எடுத்து புல்லட் வாங்கி கொடுத்துள்ளார் ஸ்வப்னில் தந்தை
Image Source: instagram-com/swapnil_kusale
பல ஆண்டுகள் கடின உழைப்பு மற்றும் பதக்கங்களுக்கு பிறகு, 2013ல் ஸ்வப்னில்-க்கு NGO அமைப்பு ஸ்பான்சர் வழங்க முன்வந்துள்ளது. அதன் பிறகு, சர்வதேச அரங்கில் போட்டியிடும் வாய்ப்பு ஸ்வப்னில்-க்கு கிடைக்க ஆரம்பித்தது
Image Source: instagram-com/swapnil_kusale
ஜூனியர் முதல் சீனியர் வரை பல பதக்கங்களை வென்ற ஸ்வப்னில்-க்கு, 2015ல் மத்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த சம்பளத்தை வைத்து தனக்கென்று சொந்தமாக துப்பாக்கி வாங்கியதாக கூறப்படுகிறது
Image Source: instagram-com/swapnil_kusale
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் ஸ்வப்னில் குசாலே. பிறகு, கடின உழைப்பு மூலம், 2022 உலக சாம்பியன்ஷிப்பில் 4வது இடத்தில் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்
Image Source: instagram-com/swapnil_kusale
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மண்டியிட்டு சுடுதல், படுத்தவாறு சுடுதல் மற்றும் நின்றபடி சுடுதல் என 3 நிலைகள் உள்ளது. முதல் இரண்டு நிலையில் பின்தங்கி இருந்த ஸ்வப்னில், நின்றபடி சுடுதலில் அதிக புள்ளிகளை பெற்று 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்
Image Source: instagram-com/swapnil_kusale
ஸ்வப்னில் குசாலேவை தனி தோனியுடன் ரசிகர்கள் ஒப்பீட்டு பாராட்டி வருகின்றனர். மகேந்திர சிங் தோனியும் டிக்கெட் பணியாற்றி, உலக அரங்கில் இந்தியாவை பெருமை பட வைத்தார். அதேபோல், ஸ்வப்னில், ஒலிம்பிக்கில் நாட்டிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளார்
Image Source: instagram-com/swapnil_kusale
Thanks For Reading!