Jul 29, 2024
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் தொடரில் இந்தியா வீராங்கனை பிவி சிந்து விளையாடுகிறார். அவர் போட்டிக்கு தயாராக பின்பற்றும் டயட் மற்றும் பிட்னஸ் டிப்ஸை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/pvsindhu1
பிவி சிந்து, வாரத்தில் 6 நாட்களும் குறைந்தது 6 மணி நேரம் பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளார். முதுகு, வயிறு, தோள்பட்டை மற்றும் முழங்கால்களில் கவனம் செலுத்தும் பயிற்சியில் ஈடுபடுவார்
Image Source: instagram-com/pvsindhu1
கார்டியோ, ஸ்ட்ரென்த் ட்ரெயினிங், பேட்மிண்டன் டிரில் என வொர்க் அவுட்டில் வேரியேஷனை ஃபாலோ செய்யக்கூடியவர்
Image Source: instagram-com/pvsindhu1
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே டயட் மற்றும் பிட்னஸ் பிளானை ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்யக்கூடியவர். குறிப்பிட்ட தொடர் முழுமையாக முடிந்தப்பிறகு, பிரியாணி போன்ற உணவுகளை Cheat Meal -ஆக சாப்பிடுவதாக கூறினார்
Image Source: instagram-com/pvsindhu1
ப்ரோட்டீன் மற்றும் கார்ப்ஸ் ஆகியவற்றை, சமநிலையில் உட்கொள்வதை உறுதி செய்கிறார். இவை போட்டி மற்றும் பயிற்சி சமயத்தில் உடலின் ஆற்றல் அளவு சீராக இருப்பதை உறுதி செய்கிறது
Image Source: instagram-com/pvsindhu1
காலை உணவாக முட்டை, பால் மற்றும் கொஞ்சம் பழங்களை உட்கொள்கிறார். இவை உடலுக்கு தேவையான புரதச்சத்து அளிப்பதாக நம்புகிறார். மாலை மற்றும் இரவில் சாதத்துடன் கொஞ்சம் காய்கறிகளும் சாப்பிடுகிறார்
Image Source: instagram-com/pvsindhu1
பிவி சிந்து ஸ்நாக்ஸ் பாக்ஸை தனது பேக்கில் எப்போதும் வைத்திருப்பார். அதில் பழங்கள் மற்றும் உலர் பழங்கள் வைத்திருக்க செய்வார். இதுதவிர, எனர்ஜி ட்ரிங் கூட அவ்வப்போது குடிக்க செய்வார்
Image Source: instagram-com/pvsindhu1
ஒரு மாதத்திற்கு காய்கறிகள், கிரில் இறைச்சி மட்டுமே சாப்பிடும் பிவி சிந்து, உடலுக்கு கெடு விளைவிக்கும் ஜங்க் உணவுகளை தொடவே மாட்டார். குறிப்பாக, சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்துவிடுவாராம்
Image Source: instagram-com/pvsindhu1
பிவி சிந்து உடலையும், மனதையும் அமைதிப்படுத்த யோகா பயிற்சிகளை ஃபாலோ செய்கிறார். இதுதவிர, நேரம் கிடைக்கும் போதும் நீச்சல் பயிற்சியிலும் தவறாமல் ஈடுபடுகிறார்
Image Source: instagram-com/pvsindhu1
Thanks For Reading!