[ad_1] ஒலிம்பிக் பதக்க நாயகி 'மனு பாக்கர்' ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

Jul 30, 2024

ஒலிம்பிக் பதக்க நாயகி 'மனு பாக்கர்' ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

S Anoj

மனு பாக்கர்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் மனு பாக்கர். அவரது ஃபிட்னஸ் ரகசியத்தை இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: instagram-com

காலையில் சீக்கிரம் எழுவது

தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை மனு பாக்கர் கொண்டுள்ளார். இந்த பழக்கம் மூலம் உற்பத்தி திறன் அதிகரிப்பதாக நம்புகிறார்

Image Source: instagram-com/bhakermanu

யோகா

காலையில் தவறாமல் யோகா மற்றும் தியான பயிற்சியில் மனு பாக்கர் ஈடுபடுகிறார். இவை மனதை அமைதிப்படுத்துவது மட்டுமின்றி துப்பாக்கி சுடுதலுக்கு தேவையான கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்க உதவுகிறது

Image Source: instagram-com/bhakermanu

ஆரோக்கியமான காலை உணவு

யோகா பயிற்சி முடிந்ததும் 8 மணியளவில் காலை உணவை சாப்பிட செய்கிறார். வீட்டில் சமைத்த சைவ உணவை மட்டுமே சாப்பிடுவாராம். முட்டை கூட சேர்த்துகொள்ள மாட்டாராம். காலை உணவு அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாக கூறுகிறார்

Image Source: instagram-com/bhakermanu

தீவிர பயிற்சி

காலையில் 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அதாவது தினமும் 6 முதல் 7 மணி நேரம் தனது திறனை வளர்க்கும் பயிற்சியில் ஈடுபடுகிறார். வெவ்வேறு துப்பாக்கி சுடும் நிலைகள் மற்றும் நுட்பங்களில் பயிற்சி பெறுவது அவசியமாகும்

Image Source: instagram-com/bhakermanu

பிசியோதெரபி சிகிச்சை

பயிற்சியை தொடர்ந்து ஒரு மணி நேரம் பிசியோதெரிபி சிகிச்சை மேற்கொள்கிறார். அவை உடலை ரிலாக்ஸ் ஆக்குவதோடு பயிற்சியின் போது ஏற்பட்ட தசை வீக்கத்தை போக்க உதவுகிறது.

Image Source: instagram-com/bhakermanu

ஜிம்

பிசியோதெரபியை தொடர்ந்து, உடலை கட்டுப்கோப்பாக வைத்திருக்க ஜிம்மில் சில மணி நேரம் செலவிட செய்கிறார். தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்

Image Source: instagram-com/bhakermanu

லைட் டின்னர்

தினமும் 9 மணிக்கு டின்னர் சாப்பிடும் மனு பாக்கர், லைட்டான உணவுகளை மட்டுமே எடுத்துகொள்வாராம். அப்போது தான், எவ்வித அசெளகரியமும் இன்றி தூங்க முடியும் என கூறுகிறார். பெரும்பாலும் 10 மணிக்கு படுக்கைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார்

Image Source: instagram-com/bhakermanu

படைப்பாற்றல் திறன்

இந்த பிஸியான அட்டவணைக்கு நடுவே, சிறிது நேரத்தை படைப்பாற்றல் வெளிப்படுத்தும் செயலிலும் செலவிடுகிறார். ஓவியம் தீட்டுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக கூறுகிறார்

Image Source: instagram-com/bhakermanu

Thanks For Reading!

Next: நயன்தாரா சொன்ன செம்பருத்தி டீயில் இத்தனை நன்மைகளா! ஈஸியா தயாரிக்கலாம்!

[ad_2]