[ad_1] ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியர்களை பெருமைப்படுத்தும் படங்கள்!

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியர்களை பெருமைப்படுத்தும் படங்கள்!

mukesh M, Samayam Tamil

Aug 5, 2024

ஒலிம்பிக் சார்ந்த திரைப்படங்கள்!

ஒலிம்பிக் சார்ந்த திரைப்படங்கள்!

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்தியர்களை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை பற்றி கூறும் திரைப்படங்கள் ஒரு சிலவற்றை குறித்து இங்கு காணலாம்!

Image Source: instagram-com

பாக் மில்கா பாக் (2013)

‘Flying Sikh’ (பறக்கும் சீக்கியர்) என அழைக்கப்படும் மில்கா சிங் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஆசிய விளையாட்டில் 4 தக்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஒரு தங்கம் வென்ற இவர், ஒலிம்பிக் போட்டிகளுக்கு செய்த முயற்சிகள் பற்றி இத்திரைப்டத்தில் காணலாம்!

Image Source: instagram-com

சந்து சாப்பியன் (2024)

1972 பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு தங்கம் வென்று வந்த வீரர் முரளிகாந்த் பெட்கார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு இந்தி மொழி திரைபடம்!

Image Source: instagram-com

GOLD (2018)

1948-ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்; சுதந்திர இந்தியா தனது முதல் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற போது, இந்திய ஹாக்கி அணியின் தக்க பலமாக இருந்த தபன் தாஸ் பற்றி இந்த திரைப்படம் விரிவாக கூறுகிறது!

Image Source: pexels-com

சூர்மா (2018)

​இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்திய ஹாக்கி அணிக்கு சந்தீப் சிங் செய்த பங்களிப்பு என்ன? என்பது குறித்து இப்படத்தை பார்த்து நாம் அறியலாம்!

Image Source: instagram-com

Mary Kom (2014)

மனிப்பூரின் சிறு கிராமத்தில் பிறந்து, 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச்சண்டை போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று வந்த மேரி கோம் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்!

Image Source: instagram-com

சாய்னா (2021)

ஹரியானாவின் குக்கிராமத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற வீராங்கனை சாய்னா நோவால் பற்றி இப்படம் விரிவாக கூறுகிறது!

Image Source: instagram-com

மைதான் (2024)

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டு பயணித்த இந்திய கால்பந்தாட்ட அணி வீரர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது!

Image Source: instagram-com

தங்கல் (2016)

ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராரன மஹாவீர் சிங் போகத், அவரது மகள்கள் கீதா போகத், பபிதா போகத் ஆகியோரின் ஒலிம்பிக்கை நோக்கிய மல்யுத் பயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: 15 வயதில் மாடல்.. நடிகை 'ஜெனிலியா' பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்

[ad_2]